குருமகாத்மீயம் – அந்தண தர்மம்

குருமகாத்மீயம் – அந்தண தர்மம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!


(இடைக்காடர் சித்தர் அருளியது)

பரஞ்சோதி வம்சம், அந்தண சத்குணங்களை பெற்றிருந்தாலும், ஏனைய மானிடர்களைப் போன்று அழிந்திருக்கின்ற பொருட்கள் மீது மோகம் கொண்டு, சத்தியத்தை உணராதவர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தண தர்மம், மனித குலத்திற்கு ஏற்படுகின்ற துக்கத்தையும், துயரத்தையும் கண்டும் காணமல் இருப்பது ஆகாது!!

இந்த அந்தமெனும் ஆதியை, பூரணமாய் தன்னுள்ளே ஏற்றிவைத்து, ஜோதியின் வெளிப்பாடு நிலைகளை(உபதேசம்), மற்ற உயிர்களுக்கு அளிக்கவேண்டும் என்பதுவே ஆகும்.

உடலின் சுழற்சியிலும், மனதின் சுழற்சியிலும் இந்த சத்தியம் ஓங்கினால் மட்டுமே, பரஞ்ஜோதியின், தென்னவனின் கீர்த்திகளும் அவதார நோக்கமும் முழுமை பெறும்!