குருமகாத்மீயம் – அன்னை பூமியை வாழ்த்துகின்ற மகத்துவம்

பூமியின் மலட்டுத் தன்மையின் காரணம்

பால்வழி மண்டலங்களையெல்லாம் கடந்து பூமியை உற்று நோக்கும் பொழுது, பூமியை சுற்றி இருக்கின்ற காந்த அலைகள், அதனின் தன்மை, நெருக்கங்கள் சற்று நலிவடைந்ததால், பூமி மலடாகிறது.

மற்றொருபுறம் விஞ்ஞானம் என்ற குருட்டு அறிவால், 100 வருடங்களில் பூமிக்கு ஏற்படுகின்ற அசம்பாவிதம், 10 வருடங்களிலேயே ஏற்படுத்தி அதிவேகமாக மலட்டுத் தன்மையை உருவாக்கிக்கொண்டு செல்கிறார்கள்.

பூமியின் வெப்ப நிலையும் அதிகரிக்கிறது.

பூமியின் மலட்டுத்தன்மை ஸ்திரீகளையும் பற்றுகிறது.

கருத்தரித்தாலும், கருவிலிருந்து உதிரும் தெய்வீக உயிர்கள், ஏதோ ஒரு குன்றிய நிலைகளிலேயே பிறக்கிறார்கள்.

பூமியின் மலட்டுத்தன்மை, மனிதனின் அழிவை நிர்ணயிக்காது. ஆனால் மனிதனின் உயிர் காரணத்தையும், காரியத்தையும் அசைத்து, அவர்களின் எண்ண ஓட்டங்களையும், பிராணனின் சுழற்சிகளையும் மாற்றுகிறது.

தீர்வு: அன்னை பூமியை வாழ்த்துகின்ற மகத்துவம்

இன்று மீண்டும் நீங்கள் இயற்கையை வளம் பெற வேண்டும் என்று எண்ணி, புறத்தில் எந்த முயற்சிகளை எடுத்தாலும், இந்த மலட்டுத்தன்மையின் காரணமாக, முழுமையாக பசுமையை ஏற்படுத்த முடியாது.

இந்த பூமியை சுற்றி இருக்கின்ற காந்த ஆற்றலை சரி செய்ய வேண்டும்.

பரஞ்ஜோதி வம்சத்தை சேர்ந்த, மாபெரும் தவத்தை மேற்கொண்டிருக்கின்ற சத்திய புருஷர்கள், புருஷிகள் தன்னுடைய மகோன்னத நிலைகளில் இருந்து, தங்களுக்குள் இருக்கின்ற அந்த காந்த ஆற்றலைப் பெருக்கி, அதை நன்றாக பரப்புவதன் மூலம், புவியின் காந்த அடர்த்தி நிலையை, ஒரு குறிப்பிட்ட காலங்களுக்குள் மாற்ற முடியும்.