குருமகாத்மீயம் – ஆத்ம குரு

குருமகாத்மீயம் – ஆத்ம குரு

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
இன்றைய குரு சீடன் உறவு
இடைக்காடர் சித்தர் அருளியது!

மாபெரும் குருவின் பராக்கிரமம், குருவின் ஸ்வரூபம், சத்தியம், நித்தியம், அலங்காரம், அவரின் ஆரோகன, அவரோகன நிலைகள், அவரின் இருப்பு, அவரின் ஞானம் இவற்றை ஒரு சீடன் உணறுதல் வேண்டும்.

ஒரு கருவை சுமந்த தாய், கருவைக் கொடுத்த தந்தை, கருவிலிருந்து தோன்றிய சக உதிரங்கள், இவை அனைத்தும் ஒரு நிலைகளிலே நின்று விடுகிறது. எந்த உறவைக் காட்டிலும், ஆத்ம குரு என்கின்ற உறவே மாபெரும் உறவாகும்.

புவியைக் கடந்து, பரத்திற்கு செல்லும் பொழுதும் அங்கும் குரு சீடன் என்ற உறவு நிலைப்படுகிறது.

இந்த உண்மையை காலத்தின் சுழற்சியால் மறந்ததால் தான், இன்று குரு சீடன் என்ற உறவு மலிவுற்று, அது இல்லாத நிலைகளுக்குச் செல்கிறது.

இன்றைய உலகில் கபடதாரிகள் என்ற அறிவின் அகங்காரத்தில் விளங்குகின்ற சிலர், தன் அறிவில் தோன்றுகின்ற பசப்பான எண்ணங்களை, ஆத்ம ஞானம் என்று தவறாக உபதேசித்து, தன் இச்சைக்கு பிறரை பயன்படுத்தி, குரு சீடன் என்ற உறவை நளித்தெறியும் கேவலமான நிலை இந்த பூமியில் ஏற்பட்டு இருக்கிறது.

ஆத்ம குரு

குரு வேறு, ஆத்ம குரு வேறு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
நம் வாழ்விலே நமக்குத் தெரியாத ஒன்றை பயிற்றுவித்தவர் யாராயினும் அவர் குரு ஆவர்.

ஆனால் வாழ்விலே ஆத்ம குரு என்பவர் ஒரே ஒருவராகத்தான் இருக்கமுடியும்.

ஒரு மனிதனுக்கு தாய், தந்தை, மனைவி, என்ற உறவு இல்லாவிடிலும், ஆத்ம குரு என்கின்ற பந்தம் இல்லையென்றால் அவன் இந்த உலகில் அநாதை நிலையை பெறுகிறான்.

வெறும் இந்த மாமிசப் பிண்டத்தைக் கொண்டு உறவாடும் உறவு அல்ல. அதைக் கடந்து, பாழாய் பிளங்குகின்ற இந்த அறிவையும் கடந்து, எலும்பு மண்டலங்களையெல்லாம் கடந்து, சூனியமாய், சத்ய பொருளாய், நித்ய கல்யாண புருஷராய் விளங்குகின்ற ஆத்ம குருவே மாபெரும் உறவாகும்.

இந்த உண்மை ஒவ்வொருவருக்கும் புரியவேண்டும்.