குருமகாத்மீயம் – உபதேசம்: வேதங்களின் சாரம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

எந்த நாளில், எந்த வேளையில், எந்த சூழலில் இந்த உபதேசத்தை நீங்கள் பெறுகிறீர்களோ, அப்பொழுது ஒரு நட்சத்திரம், அதனைச் சேர்ந்த ராசியும் இதனுடைய ஒளியாய் விளங்குகின்றது. அதோடு ஒரு சித்த புருஷர் உங்களை ஏற்றுக் கொள்கிறார். 

குருவினுடைய மகாத்மியத்தில் குருமாரி, சிரத்தை வேதியர் என்கின்ற நிலைப்பாடுகள் மிக முக்கியமான, உங்களின் வாழ்வில் உயர்வுக்குரிய பாத்திரமாகும்.

இந்த சூத்திரத்தை, எவ்வாறு ஒரு பசுவானது உண்ட உணவிற்குப் பிறகு, அந்த உணவை அசை போடுகிறதோ, அதேபோல நான் உரைக்கின்ற இந்த சூத்திரங்களை  நீங்கள் நன்றாக அசை போடவேண்டும். இதனுள்ளே மாபெரும் சத்தியங்கள் பொதிந்திருக்கிறது. 

இந்த பிரம்மத்தை, சத்தியத்தை, உண்மை என்று நீங்கள் உணர்ந்து கொண்டீர்களானால், எப்பேற்பட்ட தர்கத்திலும் நீங்கள் ஈடுபடலாம். வேதம் படித்த வேத விற்பன்னர்களும் குறை சொல்ல இயலாது.

அனைவரும் வேதங்கள் அறிய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. அதனுடைய சாரங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

வேதங்களுடைய இறுதி ஆத்ம அனுபூதி என்ற ஆத்ம ரந்திரத்தை அது சொல்லுகிறது. 

உங்களுடைய தொடக்கமே இந்த ஆத்ம ரந்திரமாக இருக்கும்பொழுது, இதைவிட பெரும்பெயர் எதை சொல்ல முடியும் என்னால்!

இதை விட எளிமையானது எவ்வாறு உனக்கு முக்கண்ணன் வகுத்தளிப்பார்.

முன்னர் காலங்களிலே இடி இடித்த போதும், மின்னல் வெட்டிய போதும், ரிஷிகள், கந்தர்வர்களின் மூலம் ஒருவரின் முற்பிறவியின் பயனால் அவர்களுக்கு மானசீகமாக உபதேசம் கொடுக்கப்பட்டது. 

அளிக்கப்பட்ட உபதேசத்தை பற்றி, அந்த பற்றிய நிலையிலேயே பல ஆயிரம் வருடங்கள் தழைத்து, மீண்டும் மீண்டும் அவதரித்து புண்ணிய பெயர்களைப் பெற்றார்கள்.