குருமகாத்மீயம் – எண்ணத்தின் தோற்றம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

ஒரு எண்ணத்தின் தோற்றம், அறிவின் தோற்றமா, மனதின் தோற்றமா, உடலின் ஏக்கமா என்று பகுத்தறிந்து பார்க்க வேண்டும்.

எண்ணம் என்பது அனைத்தும் சேர்ந்தது, ஆயினும் இது எங்கிருந்து தோற்றுவிக்கப் படுகின்ற எண்ணம் என்று நீங்கள் சற்று உற்று நோக்கிப் பார்க்க வேண்டும்.

உடல் இயக்கத்திற்கு, அறிவின் இயக்கம் தேவைப்படுகிறது, உயிர், உடல் ஆகியவைகளின் நிலைப்பாடு அங்கே இருக்கிறது.
மனதை எடுத்துக்கொண்டால் அறிவு தேவைப்படுகிறது. இந்த மனதின் இயக்கத்தை தாங்குவதற்கு உடல் இயக்கம் தேவைப்படுகிறது, மனம் வாழுவதற்கு உயிரின் நிலைப்பாடு தேவைப்படுகிறது.

ஆகவே மூன்று வித பரிணாமங்கள் இருந்தாலும் கூட, இந்த சிரசு என்று சொல்லுகின்ற உயிரின் நிலைப்பாடு ஒரு மாபெரும் உயர்ந்த நிலைப்பாடு.

இதில், உடல், மனம், உயிர் ஆகிய இயக்கங்களின் நிலைப்பாடு ஒரு முக்கோணத்தின் மூன்று ஒளி பிரதமைகள் ஆகும்.