குருமகாத்மீயம் – குருவிடம் ஆசிகளை பெறுகின்ற நிலை

இடைக்காடர் சித்தர் அருளியது

குருவினுடைய தீக்ஷண்யம், அவருடைய பஞ்ச பூதங்களிலிருந்து வெளிப்படும் நவ சக்திகளாகும். அதுவே ஓரு சீடனை ஈர்க்கிறது.

அந்த பாய்கின்ற சக்தியை ஏற்கின்ற தன்மையும், பயபக்தியும், நிதானமும், உணர்வும் ஒவ்வொரு சீடனுக்குள்ளும் இருக்கவேண்டும்.

இல்லையேல் ஒரு சிறிய குழந்தையிடம் ஒரு மாணிக்கக் கல்லை கொடுப்பது போன்றே கேளிக்கை/விளையாட்டுப் பொருட்களாக பாவிக்கப்படும்.

குருமகான் பரஞ்சோதியாரின் ஒரு முக்கியமான ரகசியம்

உனது குரு,  41 வருடம் அனுபவிக்கவேண்டிய கர்மவினையை, 4 +1 = 5 வருடங்களுக்குள்ளாகவே அத்தனை கர்மங்களையும் கழிக்கவல்ல பேராற்றல் பெற்றவர்.

அதனால் தான் அவரை நாடிய காலக்கட்டங்களில் துன்பம் அதிகரித்தாலும், அவை அனைத்தும் கர்மத்தின் வழிந்தோடல்களே ஆகும்.

இவை களையப்பெற்றால் மட்டுமே, ஒரு உயிர் தன்னுடைய உயர்ந்த நிலைகளை அடைய முடியும்.

இதை புரியாதவர்கள், பரஞ்சோதியை, உபேஷித்தும், குறை கூறியும், பிரிந்து செல்வார்கள்.

இதை புரிந்தவர்கள் அவரின் திருப்பாதங்களைப் பற்றி மோக்ஷத்தை அறியவேண்டி காத்து நிற்பார்கள்!