குருமகாத்மீயம் – தென்றல் மூலம் பரஞ்சோதி வம்சத்தினர் குருவை அடைதல்

குருமகாத்மீயம் – தென்றல் மூலம் பரஞ்சோதி வம்சத்தினர் குருவை அடைதல்

சத்குருவே சரணம்! சந்தோசம்!
இடைக்காடர் சித்தர் அருளியது


“முக்” என்ற இந்த முக்கண்ணனின் அட்சரமானது தென்றல் மூலம் ஒளிக்கற்றைகளாக கலந்து பரவும்.

இதை நீங்கள் மதிகெட்டு அகங்கார வரட்டு அறிவின் நிலைகளில் இருப்பதால் அதை உணர முடியாமல் இருக்கிறது. நீங்கள் குழப்பம், தெளிவு என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட துவாரத்தில் நின்று சந்தேகம் கொண்டு, இந்த மொழியில் வரும் சத்தியத்தை கணக்கிட்டு கொள்கிறீர்கள்.

குருதி எப்படி உணவை ஈர்க்கிறதோ, அதே போல் உயிரானது இந்த ஒளிநாதத்தை ஈர்த்து, ஊழ்வினை நீங்கி, ஒளி பரவப் பரவ, ஒரு உயிர் நுண்ணிய ஒளி நிலைகளுக்கு செல்லும்.

உணவு குருதியில் கலப்பதை அதன் செயல்சக்தியின் மூலமே உணருகிறோம். அதே போல இந்த தென்றல் மூலம் பரவி உயிரில் ஈர்கப்படுகின்ற இந்த ஒளி அலைகளை, உடல் கணக்க, மனம் கணக்க, அறிவு கணக்க அவஸ்தை கொண்டு, கண்ணீரில் உணரலாம்.

மன அழுத்தம் மெதுமெதுவாக நீங்கி அந்த உயிர் குருவை நாடி, குருவை தேடி, இந்த தென்றல் மூலம் வருவார்கள்