குருமகாத்மீயம் – நாளும், கோளும், வினையும், மெய் உணர்வு மூலம் முறைப்படுத்துகின்ற தவ சூத்திரம்

குருமகாத்மீயம் – நாளும், கோளும், வினையும், மெய் உணர்வு மூலம் முறைப்படுத்துகின்ற தவ சூத்திரம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்!
இடைக்காடர் சித்தர் அருளியது!

நாளென்ன செய்யும், கோள் என்ன செய்யும், நாடி வந்த வினை தான் என்ன செய்யும், என்ற கூற்று திருக்கேடு அற்ற பதிகம் என்று சொல்லப்படுகின்ற திருக்கோளறு பதிகத்தில் உரைக்கப்பட்ட உண்மையாகும். 

இந்த உண்மையை சற்று அன்றாட வாழ்விலே அனுசரிக்கும் பொழுது அதன் முழுமை நிலையை ஒவ்வொரு சாதகனும் உள்ளும், புறமும் அந்த சூத்திரத்தைப் பெறுவார்கள்.

நவகோள் தோஷங்கள் நீங்க ஈசானிய மூலையில் தவம்

அறையின் ஈசானிய மூலையிலிருந்து (வடகிழக்கு) ஒவ்வொரு நாளும் பிரம்ம சந்தி கழிந்து, காலை பொழுது துவங்குகின்ற அந்த சந்தியில், இந்த மாபெரும் குருவினால் உபதேசிக்கப்பட்ட உபதேசத்தை நீங்கள் பூரணமாகச் செய்ய, கிரகங்களின் தோஷங்கள் நீங்குகிறது.

உயிர்ப்புத் தன்மையைப் பெருக்க கன்னி மூலையில் தவம்

கன்னி மூலையிலிருந்து (தென்மேற்கு) அந்த கன்னியெனும் வாலையை நன்றாக அனுசரித்து, குரு கொடுத்த உபதேசத்தை நன்முறையிலே, சந்திரனின் சாட்சியாய், இறுதியாய் விளங்குகின்ற அந்த மூன்றாம் சந்தியில், நீரை அருகிலே வைத்து தவம் இயற்றி, அந்த நீரை ஒளஷதமாகப் பருக, மாபெரும் வினைகள் நீங்கும்.

புத்திர பாக்கியம் உண்டாகும். தீராத தொல்லையும், அல்லல் படுத்தும் வேதனையும், உயிர் எழுச்சியும் ஏற்படும்.

உயிர்ப்புத் தன்மை இல்லாத, மலட்டுத்தன்மை வாய்ந்த ஆணும் பெண்ணும், இந்த கன்னியெனும் மூலையில் சிறிதளவு பஸ்பம் அதாவது விபூதியை எடுத்து, அதை நீரிலே இட்டு வைத்துவிட்டு, மறுநாள் பொழுதில் எழுந்து, ஈசானிய மூலையில் இருந்து தவம் இயற்றி, அந்த நீரைப் பருக, அதன் பலமானது இன்னும் பன்மடங்கு அதிகரிப்பதோடு, அந்த உயிரிலே வீரியத் தன்மை ஏற்பட்டு, விரைவிலே சந்தான பிராப்தம் கிடைக்கும்.

மாபெரும் தேகத்தைக் கடந்தவனுக்கு, அஷ்டத்தையும் கடந்து பால்வெளி பரம் எய்தவனுக்கு, இந்நிலைகள் எதுவும் பொருந்தாது. எனினும் சாஸ்திரத்தை அனுசரித்து அதன் வழியில் செல்லும் பொழுது, அது இன்னும் மேலும் ஒத்தாசையாக, நமக்கு மாபெரும் உன்னத நிலைகளை ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்கள்.

பொருளாதாரத்தில் மேம்பட குபேர மூலையில் தவம்

குபேர மூலையிலிருந்து (வடக்கு) சிறிதளவு நாணயத்தை ஒரு மூட்டையாகக் கட்டி, உச்சியிலே வைத்து, அஷ்டமென்று சொல்லப்படுகின்ற மையத்தில், ஏழுமுகத்திலே நான்காம் மையமாகிய அனாகத மையத்திலிருந்து உச்சியை/அஷ்டத்தை  கவனித்தால், நவம் என்கின்ற சக்தி, மாபெரும் பொன்பொருளை சேர்க்கின்ற சக்தியாய் உன்னுள்ளே அபிவிருத்தியாகும்.

குபேர சம்பத்தும், குபேர யோகமும் பெறுவாய்.

அதுமட்டுமன்றி சுக்கிரன் என்ற சுக்ராச்சாரியாரின் நல்லாசிகளும் நீ பெறுவாய்.

அவரின் ஆசி ஒன்று பெற்றால் சற்று பெண்களின்பால் அதிகமாக கவர்ச்சிகள் ஏற்படும். அந்த கவர்ச்சிகளுக்குள் செல்லாமல், நீ நடுநிலைமை வகித்தால் உனக்கு மாபெரும் தோற்றமும், ஏற்றமும், முகத்திலே பொலிவுடன் சுந்தரனாக மன்மதனாக காட்சி பெறுவாய்.

கரு வழி பிரச்சனைகளை அகற்ற அக்னி மூலையில் தவம்

அக்னி மூலையிலிருந்து இந்த மாபெரும் தவத்தை செய்தால், உன்னுடைய பிராப்தத்தின் ஒரு வகையான தாய், தந்தையின் உயிரில் இருந்து விளைந்த பதிவுகள், அவர்களின் உயிரிலிருந்து விளைந்த எண்ணங்கள், ஊழ்வினையால் ஏற்பட்ட கர்ம வாசனைகள், நோய் நொடிகள் என அனைத்தும் அங்கே பஸ்பமாகிறது.

அந்த நிலையில் நீங்கள் இருக்கும்பொழுது சற்று கீழிருந்து மேலாக, முதலாம் ஆதாரத்திலே (மூலாதாரத்தில்) சற்று இருந்து, பின் அஷ்டத்திலே தழைக்க, நவம் என்னும் அல்லாதவைகளை நீக்குகின்ற, அழிக்கின்ற சக்தியாய் உங்களுக்குள்ளே அது பரிணமிக்கும்.

கருவின் மாற்றம், ஒரு விதியின் மாற்றத்தை நீ அங்கே பெறுவாய்.

பஞ்ச பூதத்திலே விளங்குகின்ற அக்னியைக் காட்டிலும், இந்த ரிஷிகளுக்கும், ரிஷி பத்தினிகளுக்கும் அந்த ரிஷிகளினுடைய மாபெரும் உன்னத புருஷர்களுக்கும், புருஷிகளுக்கும் அகத்தில் தென்படும்  அக்னியே  ஈஷா அக்னி, யோக அக்னி எனக் கூறப்படுகிறது. 

இந்த யோக அக்னியானது அக்னிக்கெல்லாம் ஆதியாய், தந்தையாய் விளங்குகிறது. 

ஒரு மூலத்தை உணர்ந்தவன், முதல் பாதத்தை உணர்ந்தவன், முதல் சுழியை உணர்ந்தவனுக்கு சற்று இந்நிலைகள் ஏற்படும்பொழுது, அந்த அக்னியின் தன்மையைப் பெறுவான். 

அதைப் பெற்ற பிறகு வேண்டுமென்றால் பருத்தும், சிறுத்தும் இருக்கின்ற நிலைகள் அங்கே ஏற்படுகின்றது.

இந்த அக்னி மூலையில் நீ இருக்கும்பொழுது, சிறிதளவு பாலை வைத்துக்கொண்டு, நீ தவம் செய்து அந்த பாலைப் பருகிவர, அது உன் உடலில் இருந்து நரகலாகவும்,  ஜல துவாரத்திலிருந்து ஜலமாகவும் உனது வினையானது நீங்கும்