குருமகாத்மீயம் – நிகுல வம்சம்

குருமகாத்மீயம் – நிகுல வம்சம்

கேள்வி : நிகுல வம்சம் பெயர் காரணம் / சொல்லினுடைய காரணம் என்ன ?

சித்தர் இடைக்காடர் சித்தலோக ஜமிக்கைகளின் பிரதிநிதியாக மொழிந்தது :
மீண்டும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது

 • நிகுலம் என்ற சொல் “மகத்துவம் நிறைந்த ,ஒளி பொருந்திய” என்று பொருள் படும்
  • சுருங்க சொல்ல வேண்டும் என்றால் அமிழ்ந்த உமிழ்ந்த நிலையாகும்
   • ஒளியை அமிழ்ந்து உமிழுகின்ற நிலையாகும்
   • முப்பரிமாணம் என்ற மூன்றாவது உணர்வு நிலை அமிழ்தல் என்றும்
   • நாற்பரிமாணம் என்ற நான்காவது உணர்வு நிலை உமிழ் என்பதை குறிப்பதாகும்
  • ஒரு கிரஹண காலத்தில் சந்திர-சூரியர்களின் அமிழ்ந்த(மறைந்த) அந்த ஒளி உமிழ்கின்ற(வெளிப்படுகின்ற) நிலையில் வரும் பொழுது, எப்படி அந்த மஹாப்ரவாகம் இந்த பூமி முழுவதும் அந்த ஆற்றலாக படர்கிறதோ, பரவி விரிந்து காணப்படுகிறதோ, அதேபோன்று மீண்டும் இந்த உலகில் ஒளி படர்தல் என்ற மஹாதர்மம் பரவ ஏற்படவேண்டுமென்று பறைசாற்றவேன்றுமென்று உருவாக்கப்பட்டதே இந்த நிகுலம் என்ற வம்சமாகும்
   • ஆகவே இந்த வம்சத்திற்கென்று காரணம் காரியம் என்ற இரு நிலையில் பெயரில்லாமல், ஒரே சிறப்பு அடை மொழியாக குறிக்ககே ஒரே வம்சமாகும் இந்த நிகுல வம்சம்
   • அப்பேற்பட்ட உத்தமகுடி,சத்தியகுடி, மேன்மைகுடி, உயர் குடி , வாழ் வளமிக்க குடி , பாரெங்கும் பட்டொளி வீசி பரவ இருக்கும் குடி , இந்த உன்னத குடியிலே ஜெனிப்பதற்கும், வாழ்வதற்கும் வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளர்வதற்கும், பல்வேறு பிறவிகளில் ஒரு மாதவம் இயற்றினால் மட்டுமே இந்த உன்னத குடியிலே, அமிர்த ஜோதியின் குடியிலே உங்களால் சாரமுடியும் , சேரமுடியும்.
   • ஆகவே அப்பேற்பட்ட உத்தம குடியிலே , உத்தமம் பொருந்திய மேன்மை பொருந்திய, மஹாகணங்களாய், புண்ணியதரிசர்களாய், மஹாபுண்ணியகீர்த்திகளாய், புண்ணியமூர்த்திகளாய், புன்னியஸ்திரிகளாய் , புண்ணியபுருஷர்களாய் இந்த மாகுடியிலே , இந்த விருக்ஷத்திலே பிறப்பெடுத்து அதோடு இணைத்துக்கொள்ள முடியும்
   • எத்தனை எத்தனை வம்சங்கள் இருந்தாலும், அனைத்தும் துவம்சம்கள் தான், அத்துணை வம்சங்களில் இருப்பவர்கள், இந்த மூன்றாவது உணர்வு நிலையின் துன்பங்களை எல்லாம் அனுபவித்து, பின்னர் நிம்மதி, சந்தோஷம், ஆரோக்கியம்,
    நன்மை, மகத்துவம், மஹோன்னதம் வேண்டி, அனைத்தும் வேண்டி வேண்டி வேண்டி இந்த நிகுல வம்சத்தில் சாடுவார்கள்.
   • இந்த நிகுல வம்சமே ஓர்உயரிய வம்சமாகும், ஆகவே தான் இந்த பாரதத்தை மட்டுமல்ல எண்திக்குகளையும் காக்கவல்ல, வலிமையையும், கடமையும், ஆற்றலும் கொண்ட நிலைப்பாடு உண்டென்று ஒவ்வொரு மஹாத்மீயத்திலும் சொல்லுகிறோம்.
 • குருமகாவாக்கியம் என்ற குருமகாத்மீயம்
  • இந்த மாஹாத்மீயம் என்ற சொல்லானது குருமஹாவாக்கியம் என்ற சொல்லை சுருங்க அடைத்த ஒரு சொல்லாகும்.
  • குருமஹாவாக்கியம் என்ற சொல்லப்படுகின்ற, இந்த நிகுல வம்சத்தின் தோற்றனாய் விளங்குகின்ற அந்த அமிர்த ஜோதியின் அம்சமாய் விளங்குகின்ற குருமஹாவாக்கியத்தின் பிறப்பிடமாய், பிறப்பிடத்தின் ஜோதியாய், அந்த ஜோதியிலிருந்து உதித்த மாபெரும் விருக்ஷமாய், அந்த விருக்ஷத்திலிருந்து தழைத்த வம்சமே இந்த நிகுல வம்சமாகும்
 • சித்த லோகத்தில் இருக்கின்ற மஹாஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது