குருமகாத்மீயம் – பரஞ்சோதி வம்ச ஒளி நிலை

குருமகாத்மீயம் – பரஞ்சோதி வம்ச ஒளி நிலை

சத்குருவே சரணம்!சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது!)

இராமன் ஆண்ட காலத்திலே, இராமனின் அஸ்திரமான இராமபானம், கிடந்த நிலையில் இருந்து இந்த உலகத்தை பரிணமித்தது.

கிடந்த நிலையில், அந்த அஸ்த்திரத்தின் முனைப் பகுதியில் ஒளியானது நிரம்பி இருந்தது. 

அந்த காலத்தில் தேவ கணங்களைக் காட்டிலும் அசுர கணங்கள், அசுர கந்தர்வர்களே அதிமாக தென்பட்டார்கள்.

தேவ கணங்களும், அசுர கணங்களும் தன்னுடைய  உடல் பலம், அஸ்திர சாஸ்திர பராக்கிராமங்களைக் கொண்டு தன் பலத்தை வெளிப்படுத்திக்கொண்டார்கள்.

இந்த இலெமூரிய கண்டம் முழுவதும் மனிதர்கள் தங்களுடைய உடல் பலத்தை அதாவது க்ஷத்ரிய தர்மத்தை மட்டுமே சிறப்பாக நிலை நாட்டினார்கள்.

ஆனால் உயிரிலே உன்னத ஏற்றம் இல்லாத நிலை இருந்தது.

அவதார புருஷர்கள் மட்டுமே உயிர் ஏற்றம் கொண்டு, மற்றவர்கள் உயிர் ஏற்றம் கொள்ளாத நிலையில் அவர்களின் விகிதாச்சாரங்கள் அதிகமாகவே  இருந்தது.

பின்னர் கிருஷ்ணாவதாரத்தில், இந்த உயிரின் சுழற்சி ஒரு அசைவை ஏற்படுத்தியது.

இந்த சிருஷ்டியின் நிலைகளிலே அதிர்வுகளை ஏற்படுத்தும் விதமாக, சுதர்ஷன சக்கரம்  என்ற சக்கரவியூகம் வகுக்கப்பட்டு, இதன் மூலம் மனிதனின்  சக்கர நிலைகள் மேம்பாடு அடையத் தொடங்கியது .

தற்பொழுது ஒளிக் கடவுளாய், குழந்தைக் கடவுளாய், இந்த பாலகனின் பிரபஞ்ச செங்கோலானது கிடந்த நிலையிலும், அசைந்த நிலையிலும் அல்லாமல், நிலையாக நேராக விண்ணை நோக்கி நின்ற நிலையிலே இருக்கின்றது.

முனையிலே ஒளி பொருந்தி இருக்கின்ற காரணத்தால், அதே ஒளியின் மேம்பாடுகளையும் அம்சங்களையும் உள்கொண்டதே இந்த பரஞ்சோதி வம்சமாகும்.

முக்கண்ணன் ஆத்மஞான பிரம்மா

முக்கண்ணனின் பல அவதாரத்திலே ஒன்று உபதேசமூர்த்தியாக, ஞானத்தை தோற்றுவிக்கின்ற, படைக்கும் தொழிலான பிரம்மா ஆவார்.

இந்த கருணாமூர்த்தி, ஒரு பிரம்மரிஷி ஆனவர், ஞானமெனும்ஒளிப் பிரதமையை உங்களுக்குள்ளே ஆவாஹனம் செய்து, மனிதனாக உண்டு உறங்கிய நிலைகளிலிருந்து, ஜீவாத்மா என்ற புதிய படைப்பை ஏற்படுத்தி உயர்த்துகின்றார்.

எவன் ஒருவன் இந்த உபதேசமூர்த்தியிடம் ஒளிப் பிரதமையைப்(உபதேசம்) பெறுகிறானோ, அவனுக்கு ஞானத்தை அடைய ஒரு ஒளிப் பிராப்த புதிய ஜென்மம் என்றே கொள்ளல் வேண்டும்!

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் அந்த குருவே தெய்வமாவார்.

குருவே முத்தொழிலையும் தன்னகத்தே கொண்டதால், குருவை இறைவனாகக் கொள்ள வேண்டும் என்பதே பிரம்ம சூத்திரமும், அதன் சாரமும் கூறுகிறது.

எந்த பிரம்ம சூத்திரமும் மாதா, பிதா, குரு, தெய்வம், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று  கூறுவதில்லை. 

உடலைப் படைக்கின்ற பிரம்மா வேறு. உபதேசத்தைப் பதிக்கின்ற பிரம்மா வேறு.

இந்த ஆத்மத்தை உங்களுள் தோற்றுவித்த காரணத்தால், இந்த முக்கண்ணன் உங்களின் பிரம்மா ஆவார்.