குருமகாத்மீயம் – பரஞ்சோதி வம்சத்தின் தர்மம்

குருமகாத்மீயம் – பரஞ்சோதி வம்சத்தின் தர்மம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!

இடைக்காடர் சித்தர் அருளியது!

அற்புதமான இந்த பொன் மலையாம், சிவ மலையாம், நம சிவாய, பரஞ்சோதி, இடைக்காடன் என்னும் சொல்லில் இருக்கின்ற பஞ்சாட்சரத்தைக் குறிக்கின்ற பஞ்ச பூதங்களின் ஆட்சியின் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற, இந்த தென்னகத்து குருமுனியின் உன்னத கீர்த்தி பெற்ற பரஞ்ஜோதி வம்சம், வருகின்ற காலங்களிலே தரணியை ஆளுகின்ற வம்சமாய் விளங்கப்போகிறது!

யூத இனங்களால் அடிமைப்பட்டிருக்கின்ற இந்த பூமியை, மாபெரும் தழைப்பு மிகுந்த பூமியாய், சுதந்திரத்தின்பால் வழிகாட்டி செல்ல, அதற்கான சூழல்களை பரஞ்சோதி வம்சம் உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் கடமையாகும்.

இந்த பரஞ்சோதி வம்சம் தற்போது தோன்றிய வம்சம் அல்ல! இந்த வம்சம், யுகங்கள் தோறும், ஒரு யுகத்திற்கும் மற்றொரு யுகத்திற்கும் இடையே இருக்கின்ற, மாற்றத்திற்குரிய வேளையிலே தழைத்திருக்கிறது.

மாபெரும் சக்தி பெற்ற வம்சத்தில் தோன்றிய அனைத்து உதிரங்களும், இந்த முக்கண்ணனுடைய ஒளியின் மகாத்மீயம், இந்த ஒளியின் தன்மையை, அதன் சாரத்தை பெற்றிருக்கின்ற காரணத்தால், பிற்காலங்களிலே அவரவருடைய பிராப்தத்திற்க்கு தக்கவாறு, அந்தந்த சூழல்களிலே உங்களுக்குள் இருக்கின்ற சத்திய ஜோதி வெளிப்பட்டு, நீங்கள் உங்கள் பிராப்தத்தை செய்து முடிக்கும் உன்னத நிலை ஏற்படவிருக்கிறது.

இன்று இந்த வம்சம் குறைந்த அளவில் காணப்பட்டாலும், பாரெங்கும் இந்த வம்சத்தை சார்ந்த உயிர்கள் பல்வேறு ஊழ்வினையின் காரணங்களால், தன் பூர்வீகத்தையும், பூர்வசாரிகளையும் அறியாத நிலைகளிலே தவித்து கொண்டிருக்கின்றவர்கள், இந்த குரு மாகாத்மீயம் என்ற இந்த குருவின் தேஜசையும், ஓஜஸையும், குருவின் பாதாள நிலை, பூமி நிலை, சஞ்சார நிலை என்று சொல்லப்படுகின்ற மூன்று நிலைகளையும், ஒரு காந்தத்தின் துகள்களை காந்தம் ஈர்ப்பது போன்று குருவின் ஒரு குடையின் கீழ், இந்த உலக மக்கள் அனைவரும் வந்து சேரும் அற்புத நிலைகள் ஏற்படும்.

அதனால் முற்காலத்தில் செய்த தவறுகளை நன்றாக ஆராய்ந்து, இந்த தவறுகள் மீண்டும் பூமியில் நடக்காதவாறு, 5000 முதல் 9000 ஆண்டுகளுக்கு ஒரு புதிய சகாப்தமும், வேண்டுதல்களும் , புதிய யுகத்தின் ஏற்றமும், அதன் பரிணாமமும் எவ்வாறு இருக்கவேண்டும் என்றும், இந்த உலக மக்களின் நிலைகளை அனுசரித்து, நல்ல பல திட்டங்களை தீட்டி, அதன் மூலம் இந்த பூமியில் அவதரிக்கின்ற ஒவ்வொரு உயிரையும் காக்கின்ற பொறுப்பு இந்த முக்கண்ணனின் வம்சத்தில் வருகின்ற ஒவ்வொருவரின் தர்மமாகும்.