குருமகாத்மீயம் – பிரபஞ்ச நல மகா தவ யக்ஞத்தின் விளக்கம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
(இடைக்காடர் சித்தர் அருளியது!)

வேள்வி என்பது உங்களுடைய அறிவிற்கும், மனதிற்கும், எண்ணத்திற்கும், செய்யப்படுகின்ற நிலை மட்டும் அல்ல.

உங்களுடைய குரு, இந்த முக்கண்ணன் உங்களுடைய தொல்லைகளிலிருந்து சற்று விலகி, இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள உலகங்களுக்கு தன்னுடைய சஞ்சாரத்தை ஏற்படுத்தி, அவனுக்கு ஆத்மனாய் விளங்குகின்ற அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தன்னுடைய ஆத்ம நண்பர்களை நன்றாக, காணுகின்ற நிலைகள், இந்த பூமியையம், பிரபஞ்சத்தையும் காக்கின்ற நிலை போன்ற பல்வேறு பரிணாமத்திலே அந்த வியாகூலத்தில் இருந்து, வியாகூலமாகி அந்த தர்மமானது நடைபெறுகின்றது.

தன்னுடைய ஒளியின் பிரதமையை உங்களினுள் பதித்து இருக்கின்ற காரணத்தால், இங்கு நீங்கள் ஏற்படுத்துகின்ற அசைவுகளானது, உபதேச மூர்த்தியின் நிலைகளிலும் ஒரு அசைவை அது ஏற்படுத்துகிறது.

ஆகவே தர்மம் நடைபெறவேண்டும் என்றால், உங்களுடைய எண்ணத்தால், செயலால், சிந்தனையால் அவருக்கு மாசுக்கள் ஏற்படாத நிலைகள் இருக்க வேண்டும்.

இந்த அசைவுகளை துண்டித்து, இந்த உபதேச மூர்த்தியாய் விளங்குகின்ற ஒளியின் பிரதமையிலிருந்து வெளிவருகின்ற அற்புதமான, அந்த ஒளியின் நுணுக்கத்தை, அதன் சூட்சுமத்தை, பிரவாகத் தன்மையை நன்றாக விரிவு படுத்தி, அந்த தன்மையிலே நிலைத்திருக்கவேண்டிய காரணத்தால், அங்கே அந்த யக்ஞம் செய்யப்படுகிறது.

ஒரு யக்ஞம் என்பது, ஒரு தாயினுடைய கருவறையிலிருந்து ஒரு குழந்தை வெளிப்படும்பொழுது எத்தகைய தீங்கும் அந்த தாய்க்கும் ஏற்படலாம், அந்த குழந்தைக்கும் ஏற்படலாம்.

ஆகவே இந்த குழந்தையைப் பெற்றெடுக்கின்றவரை, தாயின் உயிருக்கும், சேயின் உயிருக்கும் எப்படி ஒரு உத்தரவாதம் இல்லையோ, அதேபோன்று ஒரு வேள்விக்குச் செல்வதும், வெளி வருவதும் இரண்டும் மட்டுமே உங்களுக்கு அறிந்த ஒரு நிலையாகும்.

உள்ளே பிரசவிக்கின்ற நிலை என்று சொல்லபடுகின்ற இந்த சக்தியினுடைய நிலையை உள்வாங்கி, சக்தியுடன் கலந்து, சக்தியாக பரிணமிக்கின்ற நிலைகளானது சற்று மிகவும் கடினமான காரியங்கள் ஆகும்.

இந்நிலைகளை ஏற்கவேண்டுமென்றால் பிரசவத்தின் பொழுது ஒரு கர்ப்பஸ்ரீ தன்னுடைய கர்பத்திலிருந்து வெளிப்படுகின்ற அந்த சுழற்சிகளால் அவளுக்கு எப்பேற்பட்ட தீங்குகளானது ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதோ, அப்பேற்பட்ட தீங்குகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அனைத்தும் இந்த வேள்வியில் இருக்கின்றது.

ஆகவே ஒரு வேள்விக்கு செல்வதும், வேள்வியிலிருந்து வெளிப்படுவதும், என்கின்ற இருபெரும் வைபவங்கள் அல்ல.

இந்த வேள்விச் சாலையிலே, இந்த சக்தியினுடைய பீடத்திலே, சக்தியினுடைய அமர்விலே, சக்தியினுடைய ஏகாந்தத்திலே, சக்தியினுடைய நிலைகளிலே, சக்தியை பரிணமித்து, சக்தியாக வியாகூலமாகின்றவற்றை சரியாக நீங்கள் கிரகிக்கவில்லை என்றால், உங்களுக்கு அந்த வெளிப்பாடானது தெரியாது.

எப்படி ஒரு குருடனுக்கு முன் இறைவனே தோன்றினாலும், அவனால் காண இயலாதோ, அதேபோல நீங்களும் குருடர்களாகவே இருப்பீர்கள்.

அவ்வை பாட்டி சொன்னதைப் போல, கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் என்கின்ற நிலைகளே உங்களுக்குள் இருக்கிறது.

ஆக பெரும்பாலும் நீங்கள் அனைவரும் கிரகஸ்தராகவே விளங்குகிறீர்கள்.

கிரகஸ்தன் என்றால் சதாசர்வ காலமும் மிருகங்களைப் போன்று, மிருகங்களுக்குக் கூட சில கால நிர்ணயங்கள், வேளை நிர்ணயங்கள் இருக்கின்றது.

ஆனால் கால நிர்ணயங்கள், வேளை நிர்ணயங்கள் என்று ஏதும் இல்லாத நிலைகளில், விலங்குகளை விட கீழ்த்தரமான நிலைகளிலே உங்களுடைய நிலைகள் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையை நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்