குருமகாத்மீயம் – வறட்டு அறிவு, ஞானம்

வறட்டு அறிவு
எதை எங்கிருந்து சிந்திக்கவேண்டும் என்று தெரியாமல், அறிவினுள் தோன்றுகின்ற அகங்காரத்தை ஞானம் என்று உபதேசிக்கின்ற கபடதாரிகள் அதிகரித்தால், உண்மையெனும் ஞானம் ஒடுங்கி, கபடம் தழைக்கும்.

இவ்வாறு எண்ணுகின்ற எண்ணம், சில நொடிகளிலேயே எண்ணத்தின் புதிய பரிணாமம் பெற்று, அதன் நிலையை இழந்து வேறொன்றாக பரிணமிக்கிறது.

ஞானம்
உண்மையிலேயே ஆன்மாவினுள் ஒடுங்கி சென்றால் அங்கே பேர் அறிவெனும் தோற்றமானது அபரிவிதமாக பரிணமித்து இருக்கிறது.

இந்த அறிவினை வைத்து மட்டுமே எந்த உயிருக்கும் நன்மை செய்ய முடியும்.

காரணம், காரியம்
முன்னர் காலங்களில் வேத விற்பன்னர்களும், மகான்களும், மகரிஷிகளும், சித்த புருஷர்களும் காலம் கருதி, காரணத்தை அறிந்து, செயல்களை செய்தார்கள்.

இதில் காலம் கருதி என்ற நிலைகளை விட்டு, செய்த செயல்களை மட்டும் மீண்டும் நிலைபடுத்துகிறார்கள் தற்போதைய வறட்டு அறிவு படைத்த விஞ்ஞானிகள்.