குருமகாத்மீயம் – ஸ்கந்தனின் வழி வந்த பரஞ்சோதி வம்சம்

குருமகாத்மீயம் – ஸ்கந்தனின் வழி வந்த பரஞ்சோதி வம்சம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான, பூத கணத்திலிருந்து, ஒடுக்கத்திலிருந்த இந்த மனிதகுலம், மெய்மை நிலையாம், ஒளி நிலையாம், சத்திய நிலையாம் பெருநிலையைப் பெற்றார்கள்.

அதனைப் பெற்று உயிரும், மெய்யும் கூடிய மொழி ஒன்றை உருவாக்கி, மனித குலத்திற்கு அந்த மொழியிலே பரிபாஷைகளும், சம்பாஷனைகளும் ஏற்படுத்த, அதிலிருக்கின்ற அக்ஷரங்களில் உயிரையும், உண்மையும் கொண்ட இந்த தமிழ் மொழியைப் பயன்படுத்த பயன்படுத்த, தானாக வெளிப்படுகின்ற நாதத்தின்பால் மனம் லயிக்க, அறிவு லயிக்க, பிராணன் லயிக்க, குருதியின் ஓட்டமும் லயிக்க, லயிக்கும் இடமான உயிரும், உயிரைக் கடந்து ஆன்ம சொரூபமாய் விளங்குகின்ற மெய்யும் உறைந்து கிடக்க, ஒரு எளிய முறையாக அற்புத எழுத்துக்களை அருளி, அதையே மொழியாக்கி, நாகரீகமாக்கி, இனமாக்கி, வம்சமாக்கி பாரெங்கும் போற்றுகின்ற செம்மொழியாம் உயிர் மெய் கலந்திருக்கின்ற இந்த தமிழ் மொழியை ஏற்படுத்த, பல்வேறு ஜமிக்கைகளின் மூலம் மனிதன் தன்னுடைய எண்ணத்தையும், பரிவர்த்தனைகளையும் செய்து கொண்டிருந்தான்.

இந்த தமிழ் மொழியின் ஆதி கடவுள் முருகப் பெருமான், ஸ்கந்தனின் முதல் மாணாக்கனாகிய அகத்திய மாமுனி,  அகத்திய முனியின் மாணாக்கர்களிலே ஒரு மாணாக்கனாய் விளங்குகின்ற இந்த முக்கண்ணன், அப்பேற்பட்ட உன்னத பாரம்பரியத்தையும், வழியையும் கொண்ட மாபெரும் வம்சமே இந்த பரஞ்சோதி வம்சமாகும்.

ஒரு மொழியை உரைக்க, ஆத்ம ஞானம் என்கின்ற நிலைகளை ஏற்படுத்திய பாலகனாகிய தமிழ் கடவுளாம் வேலவன், தோன்றிய அவதார புருஷர்களிலே, தெய்வங்களிலே, இளமை பொருந்திய, பராக்கிரமங்கள் நிறைந்த, இந்த ஸ்கந்தன் எனும் திருநாமத்தை உடையவனின் நிஜ ஸ்வரூபம், ஒளியின் ஸ்வரூபமாகும். 

இருளைக் கடந்து இருக்கின்ற அந்த ஒளி, பரஞ்சோதியெனும் நிலையை தாங்கி இருப்பதே அந்த செங்கோல். அந்த செங்கோலைத் தாங்கி வந்தவன் மகத்துவம் பொருந்திய இந்த ஸ்கந்தனாவான்.