குருமாகாத்மீயம் – முக்கோணம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

ஒவ்வொரு தேகத்தினுடைய சிரசிலும் நான்கு விதமான முக்கோணம் இருக்கின்றது, அதுவே தசமகாவித்தை என்று சொல்லபடுகின்ற, ஸ்ரீ சக்கரத்தினுடைய நிலைப்பாடுகளாகும்.

ஆக்கினையினுடைய மையத்திலிருந்து இருபெரும் நிலைகளாக விரிவது ஒரு முக்கோணம்.

இடது வாசியிலிருந்து இருபெரும் நிலைகளாக பிரிவது இடது முக்கோணம்.

வலது வாசியிலிருந்து இருபெரும் நிலைகளாக பிரிவது வலது முக்கோணம். இது ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கின்ற நிலையாகும்.

பின்னர் அந்த சூனியத்திலிருந்து விரிகின்ற கோணங்கள் சூனிய முக்கோணம் ஆகும்.

இந்த நான்கும் அடிப்பித்த நிலையில், ஒன்றோடு ஒன்று உராய்ந்து, ஏறி நிற்கின்ற நிலைகளைக் கொண்டுள்ளது.

ஒரு மனிதனினுடைய பிரதான இயக்கங்களானது இந்த முக்கோணம் என்கின்ற நிலைப்பாட்டையே அது கொண்டுள்ளது.

சங்கல்பத்தின் நிலைகள்

ஒருவர் தன்னுடைய சங்கல்பத்தை சரிவர நிகழ்த்த முடியவில்லை என்றால், ஒருவருடைய பிரார்த்தனை அல்லது சித்திகள் அடையப்பெறவில்லை என்றால், இருபெரும் நிலைகள் மட்டுமே அங்கு கொள்ளப் படுகின்றது.

1. அந்த சங்கல்பத்தை அவர்கள் சரியான முறையிலே தாங்கிச் செல்லவில்லை என்கின்ற பொருள் ஆகும்.

2. அல்லது அந்த சங்கல்பமானது, பிரபஞ்சத்தினுடைய சுழற்சியிலே சற்று கால தாமதங்கள் தேவைப்படுகின்றது என்பதாகும்

3. மறைபொருளாக: இந்த சங்கல்பத்தைத் தாங்கிச் செல்வதற்கு அவனுடைய பிராப்தமும் வழி கொடுக்க வேண்டும்.

இந்த மூன்று பெரும் நிலைகள் அங்கு ஏற்பட்டாலன்றி ஒரு தனி மனித சங்கல்பம் பூர்த்தி பெறாது.

சிலர் பிராப்தத்திலேயே பெரும் சங்கல்பத்தைப் பெற்று அவதரித்த காரணத்தால், கேட்ட மாத்திரத்தில், எண்ணிய மாத்திரத்தில், ஒன்றும் செய்யாத சோம்பேறிகளாக இருந்தாலும் கூட, அந்த சக்திகளானது அவர்களுக்கு தந்துவிட்டுச் செல்லுகிறது. காரணம் அவருடைய சுயப்பிராப்தம்!