குருமகாத்மீயம் – குருமாரி, சிரத்தை வேதியர், உபதேச நிலைகள்

குருமகாத்மீயம் – குருமாரி, சிரத்தை வேதியர், உபதேச நிலைகள்

சத்குருவே சரணம் ! சந்தோசம் !
(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)

குருமாரி – மெய் உணர்வாளர்
சிரத்தை வேதியர் – ஞான ஆசிரியர்

பிரம்ம உபதேசத்தின் போது முச்சந்தியிலே பதிக்கப்படுகின்ற உபதேசமூர்த்தியின் ஒளிகற்றைகள், உள்ளிருங்கி பரிணமிக்க 180 நாட்கள் தேவைப்படுகிறது.

180 நாட்கள் நைஷ்டிக பிரம்மச்சர்யம் காக்க, பிரபஞ்ச ஒளியோடு இணைந்து, ஒவ்வொரு நாளும் ஏற்றம் கொடுக்கிறது.

எண்ணம், வாக்கு, உடல் (உணவு) தூய்மை காத்தால், உயிர் பிரம்மம் காப்பதில் சிரமம் இருக்காது.

மாறான எண்ணம் கொண்டு செயல்பட்டால், மீண்டும் எண்ணத்தின் கர்மத்தை தொலைத்து பூஜ்யத்தை அடைய பல காலங்கள் தேவைப்படும்.

குருமாரிகள் (மெய் உணர்வாளர்) என்ற நிலை ஏற்படும் போது, அதாவது உபதேசம் பெற்ற பிறகு, பிறந்த வம்சத்தின் நிலைகளோடு இணைவதென்பது அசாத்தியமாகும்.

உதாரணம் – ஒரு கரையிலிருந்து மறுபக்கம் செல்லுகின்ற நீர், இரு கரையின் நடுவிலே பாயும் போது, மீண்டும் தான் வந்த கரையை அடைய எண்ணுவதை போலாகும்.

5 நிலைகளில் குருமாரிகள் (மெய் உணர்வாளர்) உபதேசம் பெறுகின்ற நிலை

நிலை ஒன்று 
ஏறு பிராணன்( வாசி ) – அதி உத்தமம்
வாசி/மூச்சின் ஒடுக்கம் கொண்டு ஒளி பிரதிஷ்டை, தீட்சை பெறுபவனுக்கு, சித்தியும் கைவல்யமும் உண்டாகும்.

நிலை இரண்டு – உத்தமம்
குருவின் உயரிய நிலையை உணர்ந்து எண்ணி தீட்சை பெற்றால்,
குரு பதவியாளர் காரியதரிசிகள் ஆவார்கள்.

இந்த இரு உத்தம நிலைகளில் முதல் நிலை, அதாவது சூன்ய நிலை, அதி உத்தம நிலை.

நிலை மூன்று
இறங்கு பிராணன்( வாசி ) 
பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் எண்ணாது, அதே நேரத்தில் தன்னுடைய துன்பம் மீதும் எண்ணம் கொண்டு தீட்சை பெறுதல்.

உதாரணம் : உடல் உபாதை கொண்டு ரணத்தோடு இருந்து உபதேசம் பெற்றால் அந்த ரணம் நீங்க பிராப்தம் உண்டாகும்.

நிலை நான்கு : (நீச்ச நிலை)
பொருள் வேண்டும் என்று எண்ணி தீட்சை பெற்றால், கஞ்சத்தனம் மிக்கவனாக, தர்மத்தின் சிந்தனை சற்று குறைவாக இருக்கும். சுய தம்பட்டம் அடிக்கின்ற நிலை ஏற்படும்.

நிலை ஐந்து : (நீச்ச நிலை)
எதிர்பாலினர் மீது எண்ணம் கொண்டு அல்லது பிறறது பொன், பொருள் மீது எண்ணம் கொண்டு தீட்சை பெற, குருவின் விருக்ஷதிலிரிந்து உதிர்ந்தவனாக கருதப் படுவான்.

 ஒரு ஞான ஆசிரியரின் கடமை ஒருவரை கூடியமானவரை ஒடுக்க நிலைக்கு எடுத்துச் சென்று உபதேசம் கொடுப்பதால், அந்த உயிர் அதி உத்தம நிலை அடையும்.

நிலை இரண்டில் உபதேசம் பெற்றவர்கள் (சூன்யம் அல்லாத) நிலை ஒன்றில்மீண்டும் புதுப்பித்து கொள்ளுதல்சாத்தியமா ?காலின் கட்டை விரலால் உன்குரு உபதேசம் அளிக்க விதி மாறும் பாதைமாறும்  புதுபிக்கப்பட்ட நிலை உள்ளது 

அந்த நிலைக்கு அந்த ஊழ்வினை நீங்கி சித்தம் எழுச்சி உருக்கமும் கனிவும் ஏற்பட வேண்டும்

இந்த தேகம் கொண்டவன் தச காலங்களுக்கு முன் அவ்வாறாக ஒரு உபதேசம் பெற்ற காரணத்தால் குறுகிய காலத்திலயே உயிர் ஒரு உயர்ந்த நிலைக்கு சென்றது 

ஆள்காட்டி விரல் – கட்டை விரல் கொண்டு உபதேசம் செய்வதற்கு சுட்சமத்தில் என்ன வேறுபாடுகள் என்ன ?

இந்த உபதேசத்திலே மிக உயர்ந்த உபதேசம் இந்த கும்முட்டி விரல் என்ற இந்த காலால் கொடுக்க படுகின்ற அடிஉபதேசம். காலுக்கு கட்டை விரல் ஏதப்பா ? ஆள்காட்டி விரல் என்ற குருவிரலால் கொடுக்கபடுகின்ற உபதேசம் உயிரின் நிலைகளுக்கு எண்ணத்திற்கு கொடுக்க படுவது

கட்டை விரல் உபதேசம் இந்த பிரபஞ்சத்தின்  பிரம்மத்தில் இருந்து பிரம்மத்திற்கு கொடுக்க படுவது ப்ராப்தத்திற்கு கொடுக்க படுவது (மிக உயர்ந்த ஸ்பரிச, அடி என்ற  பாத  உபதேசம்)

ஸ்தூல நேத்ரத்தில் இருந்தே பார்த்து பழகிய உயிருக்கு உயிரின் கண்ணை கொண்டு உயிரை பார்பதற்க்கு பயிற்சி தேவை படுகிறது

  • ஒரு நிமிடமாமவது முச்சந்தியை அலங்கரிப்பானை கொண்டு உற்று நோக்க நோக்க அவன் கண்களை அடைத்தாலும் உயிரின் கண்ணை உள்முகமாக திறக்க ஏதுவாக இருக்கும் 
  • மாபெரும் சூத்திரதாரியாக குருவிடம் கேட்டு கொள்க
  • உன் குரு பலகாலங்கள் ஏகோபித்த நிலையில் இருந்தே இந்த மாபெரும்ச த்தியத்தை பெற்றார் ஆனால் பூமியின் சுழற்சியை பார்க்க குறைந்த பட்சம் உபதேசம் பெற்றதிலிரிந்து 180 நாட்கள் தேவைபடுகிறது என்பது இடைக்காடர் கருத்து

சிரத்தைவேதியர்கள் குருவிற்கும் நாளை ஸ்ரதைவேதியர்கள் ஆகிய மாணாக்கர்களுக்கு முன்னோடிகள் ஆகவே இன்னும் சிரத்தை கொள்ளல் வேண்டும்

சிரத்தைவேதியர்கள் உபதேசம் உலக மக்களுக்கு பல எண்ணகளில் கொடுக்கும் போது ஏற்படும் அசைவுகள் உபாயம் என்ன ?

எப்படி கருவுற்ற தாய் பல நிலைகளை சகித்து கொள்கிறாளோ அதே போல் சிரத்தைவேதியர்கள் இதை ஏற்றுக்கொள்ள சகித்து கொள்ள வேண்டும் இருந்தாலும் அந்த வீரியம் குறைய துளசி சாறினை இரத்தத்தில் எப்போதும் கலக்க செய்யுமாறு செய்ய வேண்டும். நாளை முதல் குருமகான் அவதரித்த சித்திரை நட்சத்திரம் சிறப்பு பெற்று திருசித்திரை என இடைகாடர் முன்மொழிய, பரஞ்சோதி வம்சம் வழிமொழிய இந்த உலகத்தால் பின் மொழியப்படும்

. மூன்று தர்மங்களை ஒரு மனிதன் இயற்ற உடல் மனம் உயிரில் சுத்தி ஏற்பட்டு பரவாழ்க்கை தேவையான நிலைகள் ஏற்படும் 

கோ-விற்கு உணவளிப்பது

அந்தண நிலையில் இருந்த போதிலும் கூட தான் பெற்ற பொருள் பிராப்தத்தால் வைசிய நிலையில்  குருஆலயத்திற்கு உணவளிப்பது ஆலய அனுஷ்டானங்களை கட்டிக்காப்பது என்று சுதர்மத்தை  இயற்றுதல்.துளசியை வணங்குதல் அல்லது துளசி என்ற மகாபிராசாதத்தை தன் இரத்தத்தில் கலக்குமாரு உட்கொள்ளுதல்இந்த தர்மங்களை யார் வேண்டுமானாலும்  செய்யலாம்

 இதை வாழ்நாள் முழுவதும் செய்துவர பூலோக வாழ்வில் அஷ்டவசியமும் அஷ்டதனமும் அஷ்டசித்தியும் பூரணத்துவமும் உண்டாகும்.