குரு மகாத்மீயம் – உபதேசத்தின் இரு நிலைசிகள்

குரு மகாத்மீயம் – உபதேசத்தின் இரு நிலைசிகள்

(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)

உன் குரு உங்களுடைய ஜீவ சக்தியை கீழிருந்து மேலாக தொட்டு உணர்த்தி, இந்த இடையல்களை நிரப்பி மேலெடுத்துச் சென்றான்.

இந்த  நமச்சிவாயம் என்கின்ற பஞ்சாட்சரம் ஏற்கனவே அரூபமாக, சூக்குமமாக உங்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த பரஞ்சோதி என்கின்ற அட்சரமோ பிரபஞ்சத்திலிருந்து அந்த விண் சக்தியை விண் பொருளை தன்னகத்தே ஈர்க்கப்பெறுகின்றது.

காலத்தின் சுழற்சியால், மனித உயிர்களினுடைய சுழற்சியானது சற்று குறைந்து இருக்க, அது சரிவர மேல் எழும்பமுடியாத காரணத்தினால், இந்த பரஞ்சோதி என்கின்ற அட்சரத்தை உச்சியிலிருந்து உங்களுடைய உடலுக்குள்ளே எடுத்துச்செல்லும் பொழுது, அங்கே ஒரு சங்கமங்கள் ஏற்படுகிறது!

உங்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசம் கீழிருந்து மேலாகவும், இந்த பரஞ்சோதி என்கின்ற அட்சரம் மேலிருந்து கீழாக இறங்கும்பொழுது, அங்கே அண்டம், பிண்டம் இரண்டும் சேர்ந்த சேர்க்கை உள்ளே நிகழ ஒரு உயர்வையம், ஏற்றத்தையும் அது அளிக்கிறது.

 

சந்தோசம்!!