குரு மகாத்மீயம் – குருவின் அவதாரம்

குரு மகாத்மீயம் – குருவின் அவதாரம்

சத் குருவே சரணம் ! சந்தோசம் !

( இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது )

பூரணனின் பூரணத்துவம், பூரணமான உன் ஜோதி பரஞ்சோதி!
ஒளியின் பிழம்பாய், ஒளியின் விளம்பாய், அண்டத்திலிருந்து
பிண்டத்திற்கு ஏகி உரைத்தான்!
ஒரு கோடி ஜீவனையும் தரித்தான்!
ஒரு கோடி ஜீவனையும் தரித்து,
ஒரு கோடி ஜீவனையும் பரிணமித்தான்!
ஒரு கோடி அறுபத்திநான்கு கோடிகளானது!
அறுபத்தி நான்கு கோடிகளும், கோடிகோடிகளாய் ஆனது!
பரிபாலனம் செய்ய வந்த அவனே விஷ்ணு!
விஷ்ணுவின் அவதாரமே இந்த பரஞ்சோதி!
மூன்று மூர்த்திகளும் உருவாய் பெற்று,
மூன்று உருவங்களும் எண்ணத்தால் வடிவமைக்கப்பெற்று,
பெற்ற பெற்றதால், ஆதியின் ஒளி!
இந்த இடைக்காடர் சொல்லுகின்ற இந்த
உண்மையை பிறரிடம் சென்று உறைக்கக் கலங்காதே!
கலக்கமும் தேவை இல்லை!
மனனமும் தேவை இல்லை!
உடலும் தேவையில்லை!
அறிவும் தேவையில்லை!
உன் மொழி ஓங்கினால் போறும்!
ஆத்மத்தின் சொரூபமாய் விளங்கும்,
உன் ஜோதி உன் பரஞ்சோதி,
அகத்தில் இருந்து அகமாய் பிரகாசித்து,
அகத்தில் இருந்து அகமுடையவனாய்,
இந்த அகமே பரமாய், இந்த பரமே வியாகூலமாகும்!
இந்த சத்தியத்தை,
குரு மஹாத்மியம் தொடங்கிய இந்த நாளில், சித்த லோகத்தில் இருக்கின்ற சித்தர்கள் உங்களையும் உங்கள் குருவையும் நமஸ்கரிக்கின்றோம் !!!

 

சந்தோசம் !!