குரு மகாத்மீயம்-குரு பிரவேச வாழ்த்துக்கள்

குரு மகாத்மீயம்-குரு பிரவேச வாழ்த்துக்கள்

சத்குருவே சரணம் ! சந்தோசம் !

(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)

 

சிவபட்டம் தரித்த தென்னகத்து குறு முனியாம் இந்த முக்கண்ணனை, சித்த லோகத்தில் இருக்கின்ற மகா ஜமிக்கைகள் தங்களின் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

கோலாகலம் பூண்டிருக்கின்ற சக்தி பீடம், இந்த கோலாகலம் எப்பொழுதும் நிரந்தரமான கோலாகலமாக விளங்கட்டும்.

சித்தலோகத்தில் இருக்கின்ற மகா ஜமிக்கைகள் இந்த கோலாகலக் கொண்டாட்டத்திலே சூக்குமதாரிகளாக, வைபவத்திலே பங்கேற்று, நிகுல வம்சத்தின் விருட்சங்கள் அனைத்திற்கும் தங்கள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

குரு தவ பீட பிரவேசம், பரஞ்சோதி வம்சத்தின் சுபிக்ஷம்

நாளை (31.8.2018) எல்லோரும் காலையிலே,
– உடலை சுத்தப்படுத்தி,
– ஆடைகளை சுத்தப்படுத்தி,
– இல்லத்திலே ஜோதியை ஏற்றிவைத்து,
– வீட்டினுடைய நில வாசப்படியை தாண்டிச் சென்று,
– பின்னர் வீட்டினுள்ளே ஒரு புது இல்லத்திற்கு, புது வாழ்கைக்கு, புதுமையான ஒரு அத்தியாயத்திற்க்கு உள்ளே செல்வதாக பாவித்து,
– ஒரு கையிலே சிறிதளவு அரிசி மணிகளையும், மற்றோரு கரங்களிலே சிறிதளவு உப்பையும் எடுத்துக்கொண்டு நன்றாக வணங்கிவிட்டு,
– உங்களின் வலது காலை எடுத்து வைத்து இல்லத்திற்குள் சென்று,
– இந்த உப்பையும் அரிசியையும் ஒரு களையத்திலே வைத்துவிட்டு,
– முக்கண்ணனை மனதார வாழ்த்தி, அவரிடம் இந்த முச்சந்தியிலிருந்து வாழ்த்துக்களைப் பெறுங்கள்.

ஆகவே 31 Aug 2018, மறக்காமல் மிகச் சிறந்த பஞ்ச பக்ஷனங்களை எல்லாம் உருவாக்கி, இந்த முச்சந்தியிலே பதித்திருக்கின்ற இந்த பிரதமைக்கு ஆகுதியாக்குங்கள்.

இந்த கிழவன் உரைத்துவிட்டான் என்ற காரணத்தால், செய்யவேண்டும் என்று எண்ணாமல், உண்மையிலேயே உங்கள் மனதிற்குள் அத்தகைய சந்தோஷத்தை வரவழைத்து நீங்கள் பிரவேசம் செய்ய, அது சக்தி பிரவேசமாக, சந்தோஷ பிரவேசமாக விளங்கும்.