குரு மகாத்மீயம் – கொரோனா நோயின் காரணமும் அதன் தீர்வும்

குரு மகாத்மீயம் – கொரோனா நோயின் காரணமும் அதன் தீர்வும்

சத்குருவே சரணம்! சந்தோஷம்

(இடைக்காடர் சித்தர் அருளியது)

நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலும் அனைத்து பஞ்சமகா சக்திகளும் கலந்து இருக்கிறது.

வரட்டு விஞ்ஞானம் மூலம் பாதாள உலகங்களை பாழ்படுத்தியதோடு, அபாயகரமாக விண்ணையும், மனிதகுலம் பாழ்படுத்தி இருக்கிறது.

கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும், நாவால் உரைப்பதையும் இம்மூன்றை மட்டும் உண்மையென்று நம்பி ஏற்றுக்கொள்ளும் நிலையே, மனிதனின் மனோபாவமாக உள்ளது.

இந்த மூன்றையும் கடக்க முடியாத நிலையால், நிகுல வம்சம், அடைமொழிக்கு தவசி வம்சமென்று போற்றினாலும், நடைமுறையில், நான்காவது நிலையான பகுத்தறிவுக்கெல்லாம் பகுத்தறிவான, ஆத்மவிசாரத்தில் மட்டும்தான் உண்மையான நடை, பாவனை, சிந்தனையின் உத்தமம் ஏற்படும்.

தற்பொழுது உங்களின் இயக்க நிலைகள், சொல்லி பதிக்கப்பட்ட நற்பதிவுகளில் இருந்து வெளிப்படுகிறது.
ஆனால் உங்களின் இயக்கம் பிரதானமாக ஆத்மத்தில் இருந்து நேராக வெளிப்பட வேண்டும்.

ஆகவே நிகுல (பரஞ்சோதி) வம்சத்திற்கு இந்நிலைகளை கடந்து, ஆத்மத்திலே நின்று, துன்பங்களை வரும் முன்னரே அறிந்து அதற்கு தயாராகி சரி செய்யும் நிர்பந்தம் உள்ளது.

அவரவர் தன் அறிவின் வெளிப்பாட்டை, தீட்டிய மரத்திலேயே குத்தி பார்ப்பது, அவரவர் பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் நரி தந்திரத்தை பயன்படுத்தி வீழ்த்த செய்வதும், விண் சக்திகளை எல்லாம் விண் சக்திகள் என்று பாராது, அவரவர் அறிவுக்கேற்ப அறிந்தவற்றை அலசி, ஆராய்ந்து பார்ப்பது, அது மட்டுமின்றி அந்த சக்திகளை மண்ணுக்கு எடுத்துவந்து ஆராய்ச்சி செய்வது இவையெல்லாம் சாதகமற்ற சூழ்நிலையேயாகும்.

விண்ணிலிருந்து கொண்டுவரப்பட்ட தாதுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று உராயச்செய்ததே, இன்று பூமிக்கு ஒவ்வாத சூழ்நிலைகளுக்கு காரணம்.

தற்பொழுது இந்த விண் பிரளயத்தினால், மனித குலத்திற்கு ஏற்பட்ட உயிர் இழப்புகள், அவர்களின் பிராப்த, பிராராப்தத்தையும் மீறிய இந்த நிலை, இவர்களை எரு வாசலுக்கு அனுப்பி வைத்த கொடூரம், இந்த வரட்டு விஞ்ஞானத்தையே சாரும்.

நோயின் தீர்வு

தற்போதைய நிலையில் இந்த மனித இழப்புகளைக் கட்டுப்படுத்த கசப்பு என்ற ஒன்றே தீர்வாகும்.

1) பஞ்ச கல்யாணியில் ஒன்றாகிய வேம்பையும், மற்றொரு மூலிகையான மஞ்சளையும் சிறிதளவு எடுத்து, இந்த இரண்டையும் நன்றாக மைய அரைத்து, ஒரு சுண்டையின் அளவிலே பாதி அளவாக பிரித்தெடுத்து, அதை காலை ஒன்றுமில்லா வயிற்றிலே உண்டு, ஒரு மணி நேரம் வேறு ஏதும் அருந்தாமல் இருக்க, இது ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். இது உள்ளே எடுத்துக்கொள்கின்ற ஒளஷத நிலை.

2) மற்றொன்று வசம்பு என்கின்ற மூலிகையை சிறிதளவு எடுத்து, அதை அவ்வப்பொழுது நுகர்ந்து கொண்டே இருக்க, இதன் மூலம் உங்களின் உடலில் தோன்றுகின்ற கிருமிகள் தன்னுடைய வீரியத்தை இழந்து, மாண்டு போகின்ற நிலை ஏற்படும்.

தற்பொழுது பரவிக்கொண்டிருக்கும் இந்த கிருமிகள் குருதி உருக்கி, சுவாச இளக்கி என்றும் அறியப்படுகிறது. அது சுவாசத்தின் நுரையீரல் பகுதியை இளக்கி விடுகின்றது. அதனுடைய சதைகளை, திசுக்களை எல்லாம் இளக்கி அதை சரியாக இயங்க விடாத நிலைக்கு எடுத்துச் செல்கிறது. குருதியில் இருக்கின்ற நீர் தன்மையை இறுகச் செய்து ஒரு மனிதனை மரண வாயிலுக்கு எடுத்துச்செல்கிறது.

3) இது கண்டத்தை கடந்தே உட்புகுந்து செல்கிறது. ஆகவே கண்டத்திலேயே நினைப்பை நிறுத்தி முக்கண்ணன் உங்களுக்கு உபதேசித்த இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து கொண்டே வர, இந்த நோயின் தாக்கத்திலிருந்து நீங்கள் சற்று நீங்கிச்செல்ல முடியும். இது ஆன்ம ரீதியாக ஓர் உபாயம்.

ஒரு நிகழ்வு ஏற்படுவதற்கு ஏதேனும் ஒரு சாதக பாதக நிலைகள் கருத்தில் கொள்ளும் பொழுது, கரியவனாகிய சனீஸ்வரனின் மாறுதல் இந்த சாதக பாதக நிலையை ஏற்படுத்தி விட்டது.

4) கருப்பு எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயையும், அதோடு சிறிதளவு வேம்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயையும் கலந்து தீபம் ஏற்றி வர சுற்றுபுறசூழல் நன்றாக மாறுகிறது.

5) இவைகளுக்கெல்லாம் மேலும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரும் என்ற காரணத்தால் தான் அன்றே போகன் உருவாக்கப்பட்ட இந்த நவ அமிர்த கூட்டினுடைய பிரதமையிலிருந்து வெளிப்பட்ட நவமணியை, தினமும் துளசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை அனைவரும் அருந்த விஷங்கள் அனைத்தும் கண்டத்திலேயே நின்று பஸ்பமாகிவிடும்.

இந்த நவ அமிர்தத்தால் செய்யப்பட்ட நவமணியை, ஓர் இரவு முழுவதும் நீரில் ஜலக்கிரீடை செய்து வைத்து, காலை அந்த நீரை உன்னத அமிர்தமாக ஒளஷதமாக ஏற்று அதை நன்றாக உட்கொள்ள, எப்பேற்ப்பட்ட கொடிய வினைகளும், நோயும், தொல்லையும் உங்களை விட்டுச் செல்லும்.

சித்த லோக ஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.