குரு மகாத்மீயம்- பஞ்சாட்சரம் : நம சிவாய! பரஞ்சோதி!

(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)
நம சிவாய என்கின்ற பஞ்ச அட்சரம், மூலத்திலிருக்கின்ற அந்த ஜீவசக்தியை, உச்சியில் இருக்கின்ற பரமாத்ம சக்தியோடு, அந்த பிரம்ம சக்தியோடு இணைக்கின்றது.

பின்னர் அது இணைந்த தருணத்தில், அதுமென்மேலும் மென்மேலும் ஓங்கிச்சென்று, அந்த பிரபஞ்சத்தோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறது.

‘ந’ மூல மையத்தையும்,
‘ம’ நீர் மையத்தையும்,
‘சி’ அக்கினி மையத்தையும்
‘வா’ காற்று மையத்தையும்
‘ய’ விண் மையத்தையும் குறிக்கிறது.

உங்களை ந, ம, சி,வா, ய என்கின்ற அட்சரம் ஜீவனை எப்படி உயர்த்துகிறதோ, அதேபோன்று இந்த ப, ர, ஞ், ஜோ, தி என்கின்ற இந்த பஞ்சாட்சரமானது பரத்திலிருந்து ஜீவனை உயர்த்துகிறது.

இதனால் ஜீவன் பரத்தோடு இணைவது சாத்தியமாகிறது.

‘ப’ உச்சியையும்
‘ர’ ஆக்கினையையும்
‘ஞ்’, கண்டதையும்
‘ஜோ’, காற்றையும்
‘தி’ மணி பூரகத்தையும் உள்ளொடுக்கியது.

கலியுகத்தில் காலனின் சுழற்சி

அக்காலககட்டங்களிலும், அக்கால சூழ்நிலைகளிலும் ஜீவன் பரத்தோடு இணைவது சாத்தியமானது.

ஆனால் இந்த கலியுகத்தினுடைய பூமியில், கால புருஷனுக்கு ஏற்பட்ட மாய கட்டுக்களால், மாய விக்னங்களால் இந்த கால புருஷனுடைய சுழற்சி சற்று பாதிக்கபட்டது.

இதனால் இந்த கால புருஷனுடைய சுழற்சி சற்று மாறுபட்டு, இந்த உயிரானது அந்த பரத்தோடு இணப்பது, சற்று சிரமமாக இருக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டே, இந்த சுட்டிக்காட்டுகின்ற உன்னதமான வித்தை உங்களுக்குள்ளே முக்கண்ணனால் உபதேசிக்கப்பட்டது.

இந்த கிழவன் (இடைக்காடர் சித்தர்) வாழுகின்ற காலங்களில் 24 வருடங்கள் நாங்கள் இந்த பிரம்மச்சரியத்தை காத்து, இதை மேலுயர்த்தி மேலுயர்த்தி, எல்லா சம்பாஷைகளையும் செய்து, கிடைப்பதற்கு அறிய இந்த உன்னத பொக்கிஷத்தை நாங்கள் அடைந்தோம்.

அந்த மகாசக்தியை உணர்ந்தோம்!
இதே வழியில்தான் உனது குருவும் அடைந்தார்!!