குரு மகாத்மீயம் – புவி காக்கும் தர்மம்

குரு மகாத்மீயம் – புவி காக்கும் தர்மம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

பூமியில் தென் பகுதியின் கடலின் நடுவில் வெற்றிடம் ஏற்பட்டு, அதிலிருந்து வெளிப்படும் எதிர்மறையான காற்றின் குளிர் சக்திகளால், தென் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி குளிர்தன்மை நகருகிறது.

ஒரு பகுதியில் பூமியின் தட்டுகளில் 4 அங்குல விரிசலினால்- வெற்றிடம், இதன் வெளிப்பாடாக பூமியின் மறு பகுதியில் அழுத்தம் ஏற்படுகிறது.

பூமியின் நிலைப்பாடினால் விண்ணில் மேகக் கூட்டம் சரியாக கலையாவிடில் நீர் பிரளயத்தினால் மாபெரும் சீற்றம் ஏற்படும்.

இதில் சமன்பாடு ஏற்படவில்லை என்றால், கிழக்கில் இருக்கின்ற அனைத்து உயிர்களும் கடலினால் இழுக்கப் படுகின்றது.

தெற்கு, கிழமேற்க்கு கடல் பகுதியில் இந்த துரதிர்ஷ்டமான இயற்கை சுழலின் காரணம்: இயற்கையின் தன்மை 256 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது. அந்த காலம் தற்காலம் ஆக இருக்கிறது.

பாதாள உலகில் ஏற்பட்ட வெற்றிடம் சாதாரணம் அல்ல.

பூத கண்களாலோ, விஞ்ஞானத்தாலோ இதனை பார்க்கவோ, சரி செய்யவோ முடியாது.

முக்கண்ணன் போன்ற மாபெரும் சத்திய சீலரால் மட்டுமே பாதாள உலகிற்குச் சென்று சரி செய்ய முடியும்.

பிரளயங்கள் ஏற்படும்பொழுது, தேவர்கள் கூக்குரலால் அவதாரப்புருஷர்கள் பூமிக்கு இறங்கி இந்த அவல நிலைகளை மாற்றினார்கள்.

அதேபோல் , கடலையும் கமண்டலத்தினுள் வற்றுகின்ற வித்தையை குருமுனியிடம் கற்றறிந்த முக்கண்ணன் வகுத்த வழியில், பூர்வாச்சார நிலையிலே, நித்திய கர்மாச்சாரங்களை நீங்கள் செய்தால் குருவிற்குள்ளே உந்துதல் ஏற்படுத்தி இந்த நிலையை சரி செய்ய முடியும். இதுவே உங்களின் கடமை.

இதுவரை, புவிகாக்க அழித்து எழுதவேண்டும் என்ற நிலைகொள்ளாத பரஞ்சோதியை, உங்களின் சோம்பேறித்தனத்தினாலும், கையாலாகாத்தனத்தினாலும் இந்நிலை மாற்றியமையாதிருக்க, பூமியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு உண்மையானால், ஆழ்ந்த நிலைக்குச் சென்று, மோப்ப சக்தியைப் பெற்ற நாயினைப் போல், பூமியின் நிலைபாடுகளை மோப்பம் கொண்டு, அதனை காக்கும் எண்ணத்தோடு கூக்குரலிட்டால், இந்த பூமியினை காக்கும் அவதார புருஷனாகிய முக்கண்ணன் இறங்கி தனது தர்மத்தை செய்வார்.