குருமகாத்மீயம் – பிரபஞ்ச சங்கல்பம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது!)

பிரம்மா, சிவன், விஷ்ணு என்கின்ற நிலைகளில் காட்சியளிப்பதும், அந்நிலைகளை உங்களுக்கு பரிபாலனம் செய்து கொடுப்பதும், மீண்டும் நீங்கள் அந்நிலைகளிலிருந்து கீழ் இறங்குவதுமாக ஒரு சுழற்சியானது நடந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இம்முறை, எப்பொழுது இந்த பரஞ்சோதி என்னும் மையத்தின் கீழ் ஒருவர் தன்னுடைய உயிரைப் பதிக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயம் மோட்சத்தை அளிக்கவேண்டும் என்கின்ற உன்னத சங்கல்பத்தை மேற்கொண்டிருக்கின்ற காரணத்தால், இந்த பிரபஞ்சமானது, எப்பேற்பட்ட தடை ஏற்பட்டாலும், அந்த செயலை எடுத்து இயம்ப காத்திருக்கிறது!!

அன்றாடம் வைக்கவேண்டிய மூன்று சங்கல்பங்கள்

உங்களின் அன்றாட பிரார்த்தனைகளில், எத்தனையோ சங்கல்பங்களை நீங்கள் வைத்தாலும், மூன்று விதமான சங்கல்பங்களை நீங்கள் வைக்க மறவாதீர்கள்.

முதல் நிலை: சுய தர்மம்

இப்பிறவியிலே ஆற்றவேண்டிய தர்மத்தை பூரணமாக ஆற்றி, மீண்டும் பிறவா நிலைக்குச் செல்வது.

இரண்டாவது நிலை: குருபீடத்திற்கு இயற்றும் தர்மம்

இப்பிறவியிலே நீங்கள் உங்களின் உடலால், மனதால், உயிரால், எண்ணத்தால், சொல்லால், செயலால், பொருளால் எதுவால் உங்களுக்கு இயலுமோ, உங்களுடைய சுய தர்மத்தை பூரணமாக இந்த குருபீடத்திற்கு, இந்த பரஞ்சோதி வம்சத்திற்கு செய்வது இரண்டாவது நிலை.

இயலாத நிலை என்பது மனதின் நிலைகளே அன்றி காரியத்தின் நிலைகள் அல்ல.

இதை செய்வதின் மூலம் முற்பிறவியினுடைய கர்ம பிராப்தங்கள் நீங்கி, உங்களினுடைய ஆத்ம உயர்வுக்கான தடைகள் விலகி, மேலான நிலைக்குச் எடுத்துச் செல்கிறது.

மூன்றாவது நிலை: அதர்மம் செய்யாதிருத்தல்

அதர்ம காரியங்களை செய்து, அதனை உணர்ந்த நிலைகளில், உங்களின் உயிரால் உருகி, மனதால் வருந்தி, அழுது, உடல் வருத்தி என பல்வேறு நிலைகளிலே , உங்களினுடைய பிராப்த கர்மங்களானது நிச்சயம் நீங்குகிறது.

ஆனால் மீண்டும் இப்பிறவியிலே இந்த ஸ்தூல தேகத்திலிருந்து அதர்மத்தைச் செய்யாமல், முடிந்தவரை தர்மத்தைச் செய்தல், அல்லது தர்மம் செய்பவரை சற்று தூண்டிக் கொடுத்தல், அல்லது ஏதுமற்ற நிலைகளில், அதர்மத்தை செய்யாது மீண்டும் பிறப்பிற்குரிய வழிகளை நீங்கள் தேடிக் கொள்ளாதீர்கள்; அதுவும் ஒரு மாபெரும் சித்தியாகும்!!