Summary

  • அரசாங்கம் மிக வலுவான உத்தமம் பொருந்திய நிலையில் இருக்கும்
  • குருவின் பரிபூரண அருள் பெற்று ஞானம் பொருந்திய நிர்வாக அரசியல் சூழ்நிலையை குறிக்கும்
  • தற்போதய நோய்த்தொற்று நிலையில் தடுப்பூசி மருந்து போன்றவை இருந்தாலும் ஒரு ஞானகுருவின் அருளால் மட்டுமே தொல்லை நோய் நீங்கும் , அந்த அமைப்பை இந்த ஜாதகம் குறிக்கிறது
  • சிம்ம லக்கினம் சிம்ம சொப்பனம் பொருந்திய அமைப்பு
  • பொருளாதார நிலை விரையம் ஏற்பட்டு பின்பு உயர்ந்த லாபங்கள் பூமியின் வழியாக மக்குளுக்கு உலகளாவிய நிலையில் ஏற்படும்
  • எதிரிகள் எப்பேர்பட்டவர்களாக இருந்த போதிலும் அதை வெல்லும் அமைப்பு உள்ளது
  • வம்பு வழக்குகள் நாடுகளிக்குஇடையே ஏற்பட்டு அது சாதமாக முடியும்
  • தூரத்தில் வருபவர்களை முன்பே சரியாக நூல் பிடித்து துல்லியமாக கணிக்கின்ற நிலை இருக்கும்
  • பழனி சித்தர்களான போகர் புலிப்பாணி தொர்புகொண்ட அமைப்பு உள்ளது
  • காற்றில் பரவி தற்போதய கிருமி நிலை ஏற்பட்டதை போல், இந்த அமைப்பு நீரால் உலக மக்களுக்கு ஆபத்தை குறிக்கும் , அதை அரசாங்கம் முன் எச்சரிக்கையோடு செயல் மக்குளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
  • இஸ்லாமிய பெண்களுக்கு நல்ல உயர்வை குறிக்கும் நிலை, இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் பலம் பொருந்தி நின்றாலும் அதை சமாளிக்கின்ற அரசாங்கம் செயல்படும்
  • முதலாளிகளை விட தொழிலாளிகளுக்கே சிறப்பான நிலை

லக்கின பாவம், குரு, சூரியன் கேது

  • லக்கினம் சிம்மம் , மூலதிரிகோணம் 5இல் லக்கினாதிபதி நிற்பது மிக உத்தமமான சிம்ம சொப்பன பலம் தரும்
  • லக்கின வலு ஆளுமை திறன் சிறப்பிற்கு அவசியம்
  • அரசாங்கம் சார்ந்த ஆளுமை திறன் ஜாதகம்
  • லக்கினாதிபதி சூரியன் நின்ற நட்சத்திரம் ஞானகாரகன் கேது இருப்பதால் பிறப்பிலே ஆன்மீகம் சார்ந்த அமைப்பு
  • லக்கினாதிபதி சூரியனும் 5ஆம் அதிபதியதி குருவும் பரிவர்த்தனை ராஜ யோகத்தில் இருப்பது மிக உத்தமமான நிலை
  • லக்கின பாவகத்தில் குரு நிற்பது உலகத்தில் ஞானிகளை குருமார்களை குறிக்கின்ற நிலை
  • ஒரு ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் லக்கினாதிபதி மிக வலுவான நிலையில் இருப்பது அவசியம்

இரண்டாம் பாவம் , பதினொன்று பன்னிரண்டாம் பாவம்

  • சந்திரன் திருச்சித்திரை என்று அழைக்க படுகின்ற குருமஹான் அவதரித்த நட்சத்திரத்தில் இருக்கின்ற காரணத்தால், பூமிகாரகன் செவ்வாய் என்பதால் உலகில் இந்த அமைப்பிற்கு பூமியின் மூலம் தன சேர்க்கை ஏற்படும்
  • 2 ஆம் வீடு அதிபதி புதன் லக்கினாதிபதி சூரியன் சாரத்தில் நின்று லக்கினாதிபதியோடு 5இல் நிற்கின்ற காரணத்தால் , 2ஆம் ஸ்தானம் நல்ல வலு கொண்டு, பொருள் தனம் சேர்கின்ற நிலை ஏற்படும்
  • சந்திரன் 12ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கின்ற காரணத்தால் பொருள் சேர்க்கை என்பது விரயம் ஏற்பட்டு பின்பு நல்ல உயர்ந்த நிலை ஏற்படும்

மூன்றாம் பாவம் , ஆறாம் பாவம்

  • ஆறாம் அதிபதி சனி, உச்சம் பெற்று தைரியம் வீரியம் ஸ்தானம் மூன்றில் இருப்பதால் எதிரிகள் எப்பேர்பட்டவர்கள் என்றாலும் அவர்களை வெல்லும் ஆற்றல் ஏற்படும்
  • குருமஹானின் அமைப்பில் 5,6ஆம் அதிபதி சனி லக்கினத்தில் உச்சம் பெற்ற அமைப்பை போன்றே 6ஆம் அதிபதி இந்த அமைப்பிலும் உச்சம் பெறுகிறது

செவ்வாய் , நான்காம் பாவம் , ஒன்பதாம் பாவம்

  • நான்காம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று , 4,9 பாவத்திற்கு உரியவன் உபாசனை தெய்வமாகிய முருகனை இங்கே குறிக்கும்.
  • தமிழகத்தில் செவ்வாய் அமைப்பு பழனி என்று குறிப்பு கொண்டு போகர் புலிப்பாணி சித்தர் அவர்கோளோடு இந்த அமைப்பு ஜாதக தொடர்பை கொண்டது
  • செவ்வாய் பூமி காரகன் ஆட்சி பெறுவதால் உலகியல் நிலைக்கு மக்களுக்கு பூமி வழியில் சிறந்த சொத்துக்கள் தன சேர்க்கை ஏற்படும்
  • செவ்வாய் அமர்ந்த நட்சத்திரம் புதனுடையது என்பதால் அது விஷ்ணு அம்சத்தை சுதர்சன சக்கிரதை குறிக்கும். குருமகான் தற்போதய நிலைகளை ஒத்ததாக கொள்ளலாம்
  • செவ்வாய் திரிகோணாதிபதி கேந்திராபதி ஆட்சி பெறுவதால் , செவ்வாய் நின்ற புதன் திரிகோணத்தில் லக்கினாதிபதியோடு இருப்பதால், மக்குளுக்கு ரத்தம் நன்றாக செயல் படும் அமைப்பு குறிக்கப்படுகிறது

ஐந்தாம் பாவம் , குரு பார்வை

  • 5, 8ஆம் அதிபதி குரு தன் வீடாகிய 5, சூரியனை பார்க்கின்ற அமைப்பு பூர்வ புண்ணியத்தை , குரு அருள் பெறுகின்ற நிலைகளை குறிக்கும் , இந்த அமைப்பு விஷேஷம்
  • சூரியன் கேதுவில் நின்று புதன் சூரிய சாரத்தில் நிற்பதால் இவர்களுக்கு மக்களை 100% கணிக்கின்ற வல்லமையும் , நூல் பிடித்து பார்க்கின்ற நுட்பமும் இருக்கும்
    • இவர்கள் கணக்கு தப்பவே தப்பாது
  • தற்போதய சூழ்நிலையில் என்ன தான் மருத்துவர்கள் மக்குளுக்கு தடுப்பூசி மாற்று முறைகளை கையாண்டாலும் , குருவின் அனுகிரஹத்தால் மட்டுமே இப்போது மிகுவும் அவசியமாக உள்ளது , 5ஆம் அதிபதி குரு வலுத்தது இந்த அனுகிரஹத்தை குறிக்கும்
  • பொதுவாக குரு மூன்று முறை ஓர் ஆண்டுக்குள்ளாக பெயர்ந்தால் 7 கோடி மக்கள் மடிவார்கள் என்பது ஜோதிட விதி , 2021 குரு மூன்று முறை பெயர்ந்துள்ளது
  • சஞ்சி என்றால் பை என்று பொருள் , சஞ்சித கர்மாவை குறிப்பதே பூர்வபுண்ணிய ஸ்தானம், மிகப்பெரிய குருவின் அருள் நிலையை இந்த ஜாதக அமைப்பு முப்பிறவியில் இருந்து கொண்டு வந்ததை குறிக்கும்

ஆறாம் பாவம் , சனி

  • ஆறாம் பாவம் சத்ருவை உலகளாவிய நிலைகளில் அண்டை நாட்டை குறிப்பதால் குறிப்பதால், வம்பு வழுக்குகள் ஏற்பட்டு, அவற்றை வெல்லும் நிலைகள் இந்த ஜாதக அமைப்பு குறிக்கும்

7ஆம் பாவம்

  • 7இல் ராகு அமர்வது உருது மொழி பேசுகின்ற இஸ்லாமியர்கள் கை ஓங்கி இருப்பதை குறிக்கும் ஏனெனில் ராகு வீடு கொடுத்த சனி உச்சம் பெறுவதால்
  • இஸ்லாமிய பெண்களுக்கு நல்ல நிலைகள் ஏற்படும்

8ஆம் பாவம், 10ஆம் பாவம்

  • உச்சம் பெற்ற சுக்கிரன் 3,10ஆம் அதிபதியாகி நீர் ராசியில்அமர்ந்து நீர் கிரஹமாகிய சந்திரன் சமசப்தம 7ஆம் பார்வை பார்ப்பதால் , வரும்காலத்து நீரின் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்ற சூழல் உள்ளது
  • அரசாங்கம் அதை முன்னரே உணர்ந்து திட்டங்களை வகுக்க வேண்டும்
  • 10ஆம் அதிபதி உச்சம் பெறுவதால், கர்மகாரகன் சனி உச்சம் பெற்று 10ஆம் அதிபதி வீட்டில் அமர்வதால் , முதலாளிகளை விட தொழிலாளிகளே ஓங்கி நிற்பார்கள்

பின்குறிப்பு

  • சனி கிருத்துவர்களை குறிக்கும், ராகு இஸ்லாமியர்களை குறிக்கும் , இவர்கள் ஓங்கி இருந்தாலும் , லக்கினம் ஐந்தாம் அதிபதி மிக சிறந்த நிலைகளை கொண்டதால் அவர்களை சமாளிக்கின்ற வல்லமை அரசியலார்க்கு ஏற்படும் அமைப்பு இங்கே குறிப்படப்படுகிறது

தற்போதய சூழ்நிலை

செவ்வாய் 2-6-2021 முதல் 20-7-2021 வரை 48 நாட்களுக்கு கடகத்தில் நீசமாகி ,சனியின் 7ஆம் பார்வை பெறுவதால் மக்கள் இந்த நாட்களில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும், ஆரோக்கியம் , கோபம் கொண்ட மனம், போர் மூளுகின்ற சூழ்நிலை இருக்கும்