குருமகாத்மீயம்- பிராரப்த கர்மம், பிராப்த கர்மம்,குரு கொடுத்த உபதேசம்

குருமகாத்மீயம்- பிராரப்த கர்மம், பிராப்த கர்மம்,குரு கொடுத்த உபதேசம்

பெற்றோர்கள் ஈன்ற குழந்தைகள், தன்னவர்க்கள் என்ற எண்ணத்தினால் ஏற்படும் விளைவு 

முன்னொரு காலங்களில், குழந்தையானது  ஐந்து வயது இளம் பருவத்தை கடந்தவுடன்  ஆச்சார்யனிடம்  அனுசரித்து, குருகுல கல்வியானது முடிந்த வேளைகளில்,  தாய் தந்தையர் மீண்டும் குருவின் அனுமதி பெற்று அந்த குழந்தையை அழைத்துச் சென்று அவர்களுக்கு சுப மங்களங்களையெல்லம்  ஏற்படுத்தி உயர்வுகளை செய்வார்கள்.

எந்த க்ஷனதிலே  தாயும் தந்தையும் அந்த குழந்தை என்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுகிறார்களோ அப்பொழுதே அந்த குழந்தையினுடைய கர்மமானது தாய் தந்தையை பிடிக்கிறது.

தாய் தந்தையை பீடித்த காரணத்தினால்,  இந்த குழந்தை பிறக்கும் வரை தாய் தந்தையிண்டைய  மேம்பட்ட  சூழ்நிலைகளில் மரய்சா நிலைகள் அமைவதைப்ப போன்று ஜோதிடர்கள், ஜோதிட வல்லுநர்கள் கூறுவதுண்டு.

இன்றைய ஜோதிடர்கள் கிரகங்களை ஜோதிட கடன்களிலிருந்து ஒருவரின் நிலைகளை கணிக்கிறார்கள்.  ஒரு உயிரிலிருந்து இந்த கிரஹங்களை கணிப்பதால், பூரணமில்லாத ஒரு நிலையாக மட்டும் இன்றி பல  கபட தாரிகள் உருவாகி, மக்களின் கைப்பொருள்களையெல்லாம் அபகரிக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 

மனிதனின் உயிர் நிலைகளையும், நவகோள்களையும் இணைக்கும் மூன்று காரணிகள்

1. பிராரப்த கர்மம்- மதியின் விதி
மானுட தேகம் தரித்து, முற்பிறவி, இப்பிறவிகளின் விதிகளை, மதி என்னும் மனதால் அறிந்து, அதை ஏற்று, அந்த விதிகளை, அதில் ஏற்படும் துன்பங்களை கண்ணீரால் மட்டுமே கரைக்க முடியும்.

மதியின் விதியை ஏற்க முற்பட்டால், அந்த விதியின் வீரியம் உங்கள் மனதிற்கு அதிக துன்பம் அளிக்காது.

முன்னர் காலங்களிலே, தன் பிராரப்தத்தை மதியால் அறிந்து, தன் மனதை, உடலை வருத்தி கர்மத்தை கரைத்தார்கள்.

2. பிராப்த  கர்மம் – விதியின் மதி

இந்த பிராரப்த கர்மத்தை கடக்க, பூரணமாக அந்த மதி மூலம் விதியை அறிந்து, தன்னை முழுமையாக சரண்புகும் பொழுது, தானாக உயிரின் ஞான பிராப்தம் வெளிப்படும்.

3. குரு கொடுத்த உபதேசம்
இந்த பிராரப்த, பிராப்த கர்மங்களை உணர ஒரு சீடனுக்கு குரு முச்சந்தியில் பதித்த அந்த மெய்யுணர்வும், அதன் பயிற்சியும் ஆதாரமாகும்.

குருவிடம் ஆசிகளை பெறுகின்ற நிலை

குருவினுடைய தீக்ஷண்யம், அவருடைய பஞ்ச பூதங்களிலிருந்து வெளிப்படும் நவ சக்திகளாகும். அதுவே ஓரு சீடனை ஈர்க்கிறது.

அந்த பாய்கின்ற சக்தியை ஏற்கின்ற தன்மையும், பயபக்தியும், நிதானமும், உணர்வும் ஒவ்வொரு சீடனுக்குள்ளும் இருக்கவேண்டும்.

இல்லையேல் ஒரு சிறிய குழந்தையிடம் ஒரு மாணிக்கக் கல்லை கொடுப்பது போன்றே கேளிக்கை/விளையாட்டுப் பொருட்களாக பாவிக்கப்படும்.

ஒவ்வொருமுறை நீங்கள் உங்களுடைய குருவிடம் செல்லும் பொழுது பயபக்தியோடு  நிதானத்தோடு  உணர்வோடு,  குரு எங்கிருந்து அந்த பிரபஞ்ச சக்திகளை ஈர்க்க உங்களுக்கு நற்பாடங்களை கற்றுக்கொடுத்தாரோ, உங்கள் குரு எந்த மையத்தை கடந்து கர்ம வினை என்கின்ற நிலைகளை கடந்து வெளிவரச்சொன்னரோ, அந்த மய்யங்களிலிருந்து, அந்தந்த மய்யங்களிலே சென்று குருவிடம் ஆசிகளை பெரும்பொழுது, அந்த ஆசிகளானது உங்களை  மாபெரும் நிலைகளுக்கு எடுத்துச் செல்கிறது.

ஆகவே என்னுடைய அன்பு குழந்தைகளாய் விளங்குகின்ற உங்களுக்கு இந்த சித்த லோகத்தில் இருக்கின்ற ஜமிக்கைகள் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கட்டும்.

உன் குருவின் முக்கியமான ரகசியம்

உனது குரு,  41 வருடம் அனுபவிக்கவேண்டிய கர்மவினையை, 4 +1 = 5 வருடங்களுக்குள்ளாகவே அத்தனை கர்மங்களையும் கழிக்கவல்ல பேராற்றல் பெற்றவர்.

அதனால் தான் அவரை நாடிய காலக்கட்டங்களில் துன்பம் அதிகரித்தாலும், அவை அனைத்தும் கர்மத்தின் வழிந்தோடல்களே ஆகும்.

இவை களையப்பெற்றால் மட்டுமே, ஒரு உயிர் தன்னுடைய உயர்ந்த நிலைகளை அடைய முடியும்.

இதை புரியாதவர்கள், பரஞ்சோதியை, உபேஷித்தும், குறை கூறியும், பிரிந்து செல்வார்கள்.

இதை புரிந்தவர்கள் அவரின் திருப்பாதங்களைப் பற்றி மோக்ஷத்தை அறியவேண்டி காத்து நிற்பார்கள்!