குருமகாத்மீயம் – உலக நல்மாற்றத்திற்கு நிலை

சித்தர் இடைகாடர் அருளியது

குரு வாழ்த்து

சித்த லோகத்தில் இருக்கின்ற மகாஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. தென்னகத்துக் குறுமுனியாம், சிவபட்டம் தரித்த முக்கண்ணனாம் , மும்மலையின் வாசனாய் வீற்றிருக்கின்ற நிகுல வம்சத்தின் தோற்றனாய் விளங்குகின்ற இந்த முக்கண்ணனை, சித்த லோகத்தில் இருக்கின்ற மகாஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

நிகுல வம்சம் வாழ்வாங்கு வாழ்ந்திட, வையகம் போற்றி வாழ்ந்திட, பாரெங்கும் பட்டொளி வீசி வளர்ந்திட, இந்த நிகுல வம்சத்தின் அத்தனை அத்தனை விருட்சங்களையும் இந்த சித்தலோகத்தில் இருக்கின்ற மகாஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

கார்கோடகனின் வாக்கு

கார்கோடகனின் வாக்குப்படி எக்காலங்களில் எது நடக்க வேண்டுமோ அப்போதுதான் அது நடக்கும் என்று இந்த கிழவனின் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பான்.

3 காலத்திற்கு முன்னரே இந்த பூமியை காக்கின்ற சூழ்நிலையைச் செய்து இருந்தீர்கள் என்றால், இத்தகைய விஷதோஷ நிலைகளானது இந்த பூமியைத் தாக்காமல் போயிருக்கும்.

அன்றே கார்கோடகன் உரைத்தான்: “கிழவா எத்தனை எத்தனை நீ உரைத்தாலும், நான் ஒரு உண்மையை சொல்லுகின்றேன் கேள். அனைத்திற்கும் கால, வேளை, நிர்பந்தங்கள், வர்த்தமானர்கள் ஏற்படும் பொழுதுதான் இந்த மானிடர்களுக்குள், இந்த உதயசக்திகள் தோன்றி, அது விஜயசக்தியாக, வீரியசக்தியாக, வாக்குசக்தியாக, எண்ணசக்தியாக, சொல்சக்தியாக பல்வேறு நிலைகளில் உருவெடுக்கும்”.

சரி, அவனுடைய திருவாக்கு அப்படியே இருக்கட்டும். பூமி ஆலகால நிலைகளுக்குச் செல்லக்கூடாது என்பது இந்த கிழவனுக்கும், சித்த லோகத்தில் இருக்கின்ற ஜமிக்கைகளில் ஒரு சாராரின் கூற்றாகும். மற்றொரு சாராரோ பூமியில் நடக்கவேண்டிய சம பரிபாலனங்கள் அனைத்தும் நடக்க வேண்டும் என்பது சிலரின் கூற்றாகும். யாருடைய கூற்று வென்றது யாருடைய கூற்று அமல்படுத்தப்பட்டது என்கின்ற நிலைகள் தற்பொழுது நமக்கு அவசியம் இல்லாத ஒன்று.

ஆனால் இப்போததேனும் உங்களுக்கு இந்த பூமியினுடைய நிலைகளின் மீது கருணையம் காதலும் ஏற்பட்டுள்ளுது. நீங்கள் எடுத்த இந்த முயற்சிகள் யாவும் சித்த யோகத்தில் இருக்கின்ற மகாஜமிக்கைகளுடைய நல்லாசிகளுக்கு உட்பட்டதாகும். இதற்குப் பரிசாக நீங்கள் எதற்காக தவம்இருக்கிறீர்களோ, அந்த தவம் விரைவிலேயே பூர்த்தி பெறும்! பூர்த்தி பெறும்!

நீங்கள் சொன்ன இந்த அமைப்பை நான்கு வார்த்தைகளில் உரைக்க வேண்டும் என்றால்

விருத்தி
நிவர்த்தி
ஒரு குடையின் கீழ் நல்லாட்சி
பரிபூரண அமைதி

விருத்தி

இந்த நான்கு வாக்கியத்தில் அனைத்தும் உள்ளடக்கியாகிவிட்டது. இந்த கிரகங்களினுடைய சேர்க்கை, அதனுடைய சுழற்சி, கிரகங்கள் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்கள் இந்த நான்கு வார்த்தைகளில் அடைக்கப்பட்டு விட்டது.

விருத்தி என்ற சொல்லுக்கு, தர்மங்கள், செல்வங்கள், புறச்செல்வங்கள், அகச்செல்வங்கள், மண்வளம், உயிரினங்களுடைய சந்தோஷங்கள் ஆகிய அனைத்தும் பூரண விருத்தி பெறும்.

நிவர்த்தி

நோய் தோஷங்களுக்கு நிவர்த்தி, துன்பங்களுக்கு நிவர்த்தி, எந்த தவறும் செய்யாமல் மலடிகளாகப் பெயர் பெற்றுக் கொண்டிருக்கும் அத்தனை உத்தம கன்னியர்களுக்கும் நிவர்த்தி.

துன்பத்தில் அமுங்கிக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நிவர்த்தி என்பதை இந்த கிரக ஓட்டங்கள் குறிக்கின்றது.

ஒரு வெண்குடையின் கீழ் நல்ஆட்சி

ஒரு வெண்குடையின் கீழ் ஓர் ஆட்சி என்பது: தலைவன்  ஒருவனே, மகாஅரசன் ஒருவனே. அந்த ஒரு அரசனுக்கு கீழ் மற்ற சிற்றரசர்கள். இந்த மகாஅரசனின் முடிவுகள் அனைத்து சிற்றரசர்களையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் நன்மை அளிக்கின்ற வகையில் நல்ல முடிவுகள் எடுப்பதாகும்.

சிற்றரசர்களின் முடிவுகள் எப்பொழுதும் தன் இனம், தன் மக்கள், தன் தேசம், தன்னைச் சார்ந்தோர் என்று மிகக் குறுகிய வட்டத்தில் செயல்படுவார்கள். இவ்வாறு செயல்பட்டால் ஒரு தொலைநோக்கு பார்வை, விஸ்தரித்த பார்வை, விஸ்தரித்து அனுகூலம், விஸ்தரித்த நன்மைகள் யாவும் நடந்தேறிடாது. ஆகவே அணைத்து சிற்றசர்களையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு மையமாக விளங்குவது அந்த வெண்குடையாகும்.

அனைத்து ஜீவராசிகளினுடைய ஆத்மகாரகன் என்று சொல்லப்படுகின்ற ஆத்ம போதகத்தை அளிக்கின்ற, ஆத்ம ஒளியை அளிக்கின்ற ஆத்ம உத்தமத்தை அளிக்கின்ற, ஆத்ம சொரூபத்தை அளிக்கின்ற இந்த ஆத்மகாரகன், இந்த பூமியினுடைய ஆத்மன் சூரியன் ஆவான்.

அந்த சூரியனுடைய சிம்மாசனத்தை அலங்கரித்த கொண்டிருக்கின்ற அந்த வெண் குடையின் கீழ், ஒரு மிகச்சிறந்த, ஒளி நிறைந்த அரசனை கௌரவிக்கின்ற அந்த வெண்குடை; ஒளிமிகுந்த சூரியனிடமிருந்து எப்படி அனைத்து உயிரினங்களும் பரிபாலனம் செய்யப்படுகிறதோ, அந்த ஆத்ம காரகன் விளக்க முடியாத சொல்லால், அடக்க முடியாத எண்ணிலடங்காத பணிகளை எவ்வாறு மேற்கொள்கின்றானோ, அத்தகைய அத்தகைய பணிகளை உள்ளடக்கிய அந்த சூரியனின் ஒளியைப் போன்றே, ஓர் உன்னதமான இந்த லெமூரியா கண்டத்தின் மைய்யமாய் விளங்குகின்ற, இந்த ஒளி மிகுந்த இந்த பகுதி, இந்த பகுதியானது அந்த வெண்குடையின் கீழ் மிகச்சிறந்த பரிபாலனத்தை ஏற்படுத்தி, அனைத்து நாடு, நகரங்கள், மக்கள், நாட்டின் பிரஜைகள், ஏன் இந்த உலக நாடுகளினுடைய பிரஜைகள், அந்த நாட்டினுடைய வம்சாவழிகள், அந்தந்த நாட்டினுடைய கலாச்சாரங்கள், அனைத்தும் பாதுகாக்கப்படுகின்ற ஓர் உத்தம நிலையாக அது விளங்கப்படுகின்றது.

எப்பொழுது உலகத்தில் ஒரு குடையின்கீழ் மிகச் சிறந்த ஆட்சி பரிபாலனம் ஏற்படுகிறதோ, அப்பொழுது பொற்காசுகளில் தொடங்கி, பேசுகின்ற மொழிகளில் தொடங்கி, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம், தேசம் விட்டு தேசம் செல்லுகின்ற அடையாள குறிகளெல்லாம் மாறி, ஒரு மிகச்சிறந்த, ஒரு சமதர்ம இறை நிலைகளானது, சமதர்ம பரிபாலனம் ஏற்படும் என்பதை குறிக்கின்றது!

பரிபூரண அமைதி

இறுதியாக எல்லா உயிரினங்களும், எல்லா ஜீவராசிகளும், எல்லா தோன்றிய தோன்றா அத்தனை ஜீவராசிகளும் நினைப்பது ஒன்றே ஒன்று. சுகமான, சுபமான, அமைதியான, துக்கமற்ற, நன் நிலை ஏற்படவேண்டும் என்பதே ஆகும்.

அவரவர்களுடைய கால தர்மத்தாலும், கால கர்மத்தாலும், அவரவர்கள் நினைக்கின்ற நிலைகள் வேறு, அந்த கால கர்மத்தால் ஏற்பட்டிருக்கின்ற சில அண்டாள, சண்டாள, வண்டாள தோஷங்கள்  என்று சொல்லப்படுகின்ற மூன்று விதமான தோஷங்கள் எல்லாம் சற்று சாந்தி பெற்று, அவர்களும் அனுபவிக்க வேண்டிய துன்பத்தை சற்று குறைவாக அனுபவித்து, அவர்களும் சற்று சந்தோஷ நிலைகளில் வாழ்வாங்கு வாழக்கூடிய நிலைகள் தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

பூமிக்கு விண்ணிலிருந்து அனைத்தும் கிடைக்கும்

இந்த பூமி விண்ணை நோக்கிய பூமி. இந்த விண்ணிலிருந்து கிடைத்தால் மட்டுமே இந்த பூமிக்கான நன்மைகள் ஏற்படும். ஏனென்றால் பாதாள உலகத்தில் அனைத்தும் இருக்கிறது. ஆனால் மனிதக் கூட்டங்கள் அங்கே வாழ முடியாது. ஆகவே இந்த பூமியின் மேல்பரப்பில் வாழ்ந்து இருக்கின்ற அனைவரும் விண்ணை சார்ந்தே வாழ வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே உங்களுக்கு ஏற்புடைய வேண்டுமானாலும், விண்ணிலிருந்து அந்த சுகங்கள் ஏற்பட வேண்டும். இந்த விண்ணிலிருந்து அனைத்தும் ஏற்பட வேண்டும்.

பிரயோகம்

ஆகவே தற்போது வடிவமைத்துக் இருக்கின்ற நவகோள் பொருத்தப்பட்ட இந்த சக்கரத்தை, திருச்சித்திரை நன்னாளில் இருந்து, இந்த பூமியின் மீது எவரெவர்களுக்கு அக்கறை இருக்கின்றதோ, இந்த பூமி சுபிட்சம் பெறவேண்டுமென்று எவரொருவர் நினைக்கின்றார்களோ, எவரெவர்களுக்கெல்லாம் தன்னுடைய ஆத்மகாரகனான அந்த ஆதவன் ஒளி மிகுந்து காணப்படுகின்றனவோ, எவனெல்லாம் தன்னுடைய கடமை என்று இதனை ஏற்று, சிரம் தாழ்ந்து முன்வருகின்றாரோ, அவர்கள் நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லை மையமாகக் கொண்டு, அந்த நம்பிக்கை என்கின்ற ஒன்று இருக்குமேயானால், கொடுக்கப்பட்ட இந்த சக்கரத்தை முக்கண்ணனின் வழிகளே , இதனுடைய நான்கு பகுதிகளிலும் இந்த நான்கு அட்சரத்தை எழுதி, அந்த சக்கரத்தின் நடுவிலே இலுப்ப நெய்யால் ஏகஜோதி ஒன்றை ஏற்றி வைத்து, முக்கண்ணன் வகுத்துக் கொடுத்த அந்த மந்திரச் சொற்களை பயன்படுத்தி, நீங்கள் இந்த சக்கரத்தில் பதிக்கப்பட்டிருக்கின்ற கிரகங்களை முக்கண்ணன் அருளிய நிலைகளை வாழ்த்த வாழ்த்த, இந்த கிரகங்கள் தன்னுடைய இயல்பு நிலையிலிருந்து சுழன்று, மகாபாதக நிலையிலிருந்து சுழண்டு, மிக உத்தம நிலைகளை, பலன்களை இந்த விண்ணிலிருந்து கொடுத்தே தீரும்.

நம்பிக்கையும் விசுவாசமும் இருப்பவர்கள் மட்டுமே இந்த பிரயோகத்தை செய்யவேண்டும்

ஆகவே கருணை கூர்ந்து, தயைகூர்ந்து, விசுவாசம் இருக்கின்றவர்கள் மட்டும், நம்பிக்கை இருக்கின்றவர்கள் மட்டும், நம்பிக்கையை தும்பிக்கையாக கொண்டு விளங்குபவர்கள் மட்டும், இந்த பிரயோகத்தைச் செய்து உலகத்தை நலம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் இன்றைய காலகட்டத்திலே, அஸ்வமேத யாகங்கள், பவானி யாகங்கள், அதி சுந்தரி யாகங்கள்,  பிரம்மசூழினி யாகங்கள், யாஷினி யாகங்கள் எல்லாம் செய்ய இயலாது. ஏனென்றால் அதற்கு கைதேர்ந்த பண்டிதர்களும் இந்த பூமியிலே இல்லை, அதை செய்ய வேண்டிய சுற்றுச்சூழலும் இந்த பூமியில் இல்லை.

ஆகவே நீங்கள் ஏற்றுகின்ற ஒவ்வொரு ஜோதியும், ஒரு யாகத்திலிருந்து வெளிப்படுகின்ற ஒரு கணலாகவே கொள்ளப்படுகிறது. இந்த ஜோதியில் இருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொரு கணலும், இந்த ஜோதியில் இருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொரு சுடரும், இந்த பூமியினுடைய அனைத்து பரோபகார நிலைகளையும் ஸ்தாபிக்க செய்யும்.

ஆகவே இதனை எதிர்மைறையாகக் கொண்டு, நிர்ப்பந்தத்தின் பெயரில்,அல்லது பூரண விசுவாசமும் நம்பிக்கையும் இல்லாத நிலையில் இதை ஏற்றுவீர்கள் என்றால், அது உங்களுக்கு தோஷமாக மாறி விடும். ஆகவே உண்மையும், சத்தியமும் உங்களிடம் இருந்தால், அந்த உண்மை சத்தியத்தை கொண்டு, இந்த கடமையை நீங்கள் செய்தால் அதுவே போதுமானது.

முற்று சந்தோஷம்

உணர்வாளர்களுக்கு

யாருக்கெல்லாம் இந்த தர்மத்தில் விருப்பம் உள்ளதோ, அவர்கள் தனிப்பட்ட முறையிலே பதிவு செய்யவும்