குருமகாத்மீயம் – குருமாரி(உணர்வாளர்), சிரத்தை வேதியர்களின்(ஞான ஆசிரியர்) பெரும் பயன்

குருமகாத்மீயம் – குருமாரி(உணர்வாளர்), சிரத்தை வேதியர்களின்(ஞான ஆசிரியர்) பெரும் பயன்

சத்குருவே சரணம்! சந்தோஷம்!

முக்கண்ணன் மனிதனுடைய மனோபாவங்களை சற்று உற்று நோக்கி, மிக எளிதான முறையில், இந்த ஒளிப் பிரதமையை முச்சந்தியில் பதித்து அங்கு உங்களை வியாபிக்க செய்கின்றான்.

இதற்கு குருவும், குருவின் சிரத்தை வேதியர்களும் முக்கிய காரணமானவர்கள்.

இந்த ஒளி எனும் வம்சத்தின்  வெளிப்பாடு சிரத்தை வேதியரின் ஒழுக்கமும், தவமும் ஒளிர்கின்ற நிலைகளே இதற்கு சான்றாகும் .

இன்றைய சிரத்தை வேதியர்கள் நாளைய சித்த லோகத்து மகா சமிக்ஞைகள் ஆவார்கள்.

சிரம் என்னும் சிரத்தை அவர்கள் பாதுகாக்க, சித்த லோகம் அவர்களுக்காக காத்திருக்கிறது.

இன்றைய குருமாரிகள் நாளைய சிரத்தை வேதியர்களாக இருந்து, வருகின்ற பரஞ்சோதி வம்சத்தை சேர்ந்தவர்களை, சிரத்தை வேதியர்களாக ஆக்குவது அவர்களுடைய தர்மம்.

இந்த குருமாரிகள், சிரத்தை வேதியர்கள் என்கின்ற இந்த கால சுழற்சியை நன்றாக பற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த சுழற்சியை சரிவர செய்யவில்லை என்றால், மாபெரும் சீற்றமும், தாழ்வும்  கொண்டு மனிதனை மனிதனே உண்டு வாழும் நிலை ஏற்படும்.

இந்த முக்கண்ணனின் வம்சத்தை சேர்ந்த அனைவரும் உருபெற்றே தீரவண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

பூமியிலிருந்து கண்டால் இந்த கிழவன் கூறும் நிலைப்பாடுகள் புரியாது.

*நவத்தில் தழைத்தால் இந்த மொழியின் சாரத்தை, சூத்திரத்தை அறிவீர்கள். *