குரு மகாத்மீயம் – குரு சீடர் உறவு

குரு மகாத்மீயம் – குரு சீடர் உறவு

சத் குருவே சரணம்! சந்தோசம்!

 

குரு-சீடர், சீடர்-குரு புரிந்து கொள்ளுதலில் உறவு மேம்படும்.

ஒரு முறை குறுமுனி அகத்தியர் வடக்கே செல்லும் பொழுது, தன் சித்தத்தில் எழுந்த “முஹ்” என்னும் மந்திரத்தை முக்கண்ணனுக்கு உபதேசித்தார்.

ஒரு சொல், சிறு சொல், குரு சொல் என்ற தத்துவதைக் கொண்டு, உன் குரு 17 ஆண்டுகாலம் தவத்தில் ஈடுபட்டார்.

அந்த தவத்தின் வலிமையால் பிரபஞ்சத்தில் நாத மண்டலத்தில் “முஹ்” என்னும் நாதம் பரஞ்சோதிக்கு உரியதாகும். இதுவே குரு பக்திக்கு மிகச்சிறந்த உவமையாம்.

சீடனுடைய சரணாகதியை பொருத்தே, குருவின் அன்பு நிலை ஏற்படும்.

குருவின் அன்பு இரண்டு நிலைகளில், அன்பு அன்பாக, அன்பு கடினமாக வெளிப்படும்.

குருவின் நிலைகளில் ஒரு சீடனால் எப்படிப்பட்ட முறையில் செயல்கள் செய்யபட்டாலும் , குரு மாற்றி செய்திருக்க வேண்டும் என்றே உணர்த்துவார்.

இதைக் கேட்டு பரஞ்சோதி வம்சத்தினர், நம் குரு இப்படி சொல்லிவிட்டாரே என்ற தாழ்வு மனப்பான்மை கொள்வது தேவை இல்லாத நிலை.

ஏனெனில் குரு, சீடரிடம் பூரணத்துவத்தை எதிர்பார்ப்பதுண்டு.

விசுவாமித்திரர், ஸ்ரீ ராமன் நடத்திய யக்ஞத்தில், பானங்களை இன்னமும் சரியாக எய்தினால் குறுகிய காலங்களிலேயே யுத்தம் முடிந்திருக்கும் என்றார்.

இதற்கு காரணம், சீடர்கள், மேலும் பக்குவம் அடையவும், அகங்காரம் நீக்கவும் குரு கொள்ளும் நிலைகளாகும்.

பரஞ்சோதி வம்சமானது குரு போற்றும் போது ஆனந்தம் கொள்வதும், தூற்றும் போதும் துக்கம் கொள்வதுமாக உள்ளது.

துக்கம் கொள்ளும் போது குரு நிந்தனை என்பதும் அவசியம் இல்லாத செயலாகும்.

எந்த உறவை காட்டிலும், குரு உறவை புரிதலின் மூலம் தன்னை மேம்படுத்தி கொள்ளல் சீடர்களுக்கு அவசியமாகும்.

குருவின் செயல்பாட்டை பூரணமாக எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாத காரணத்தால், அன்பு சரணாகதியே உத்தம நிலை.

அதே போல் குருவிடம் வாக்களிக்கும் முன் ஆத்ம அறிவோடு சிந்தித்து சத்திய வாக்கை அருளவும்!

சந்தோசம்!!