33வது வேள்வி நிலைப்பாடு – குரு மகாத்மியம் இடைகாட்டு சித்தர் மொழி

இந்த வேள்வி நிலைகளை தலைமை ஏற்று மொழிந்தவர் பல்குணி சித்தர் ஆவார்.

சித்த லோக மகாஜமிக்கைகள் என்ற சித்த புருஷர்கள் குருமகானை முக்கண்ணன் என்றும் ,பரஞ்ஜோதி குடும்பத்தை நிகுல வம்சம் என்றே அழைப்பார்கள்.

Highlights

குரு வாழ்த்து

•சித்த லோக ஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை முக்கண்ணனுக்கும் நிகுல வம்சத்திற்கும் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

சிறப்பு நற்பவி வாழ்த்து

•பரஞ்ஜோதி என்கின்ற நெறி பவிஷ்யமாகட்டும் !

•பரமாத்ம ஜோதிநெறி பவிஷ்யமாகட்டும் !

விருக்ஷம்-கனி உவமை

 • மாதுளை விருக்ஷம் இருகின்றது என்று வைத்துக்கொள்வோம், அது வளர்ந்து கனிந்த பிறகு, வானர கூட்டங்களும் ஏனைய ஜீவராசிகளும் அதை பல இடங்களுக்கும் எடுத்துசென்று, உண்டு , மீதத்தை மற்றொரு இடத்தில் விடுகிறது. அதுவும் விருக்ஷமாகி மீண்டும் பூத்து, காய்த்து, கனிந்து அதை சுற்றி மற்ற செடிகளும் உருவாகிறது. இவ்வாறாக காலம் உருண்டோட, அந்த ஏக விருக்ஷம், ஒரு மாதுளை காடாக, பசுமை நிறைந்த ஜனக்கோடி விருக்ஷங்களாக அநேகமாக மாறுகிறது.
 • அதேபோல் முக்கண்ணன் என்ற இந்த பரஞ்ஜோதி விருக்ஷமானவன், தன்னைத்தானே வேள்வியின் மூலம் ஆகுதியாக்கி, அன்பெனும் கனியை உங்களுக்காக பூத்து குலுங்க செய்கிறான். இந்த முக்கண்ணானவன், சூரிய கதிர்கள் வாட்டியதை பொறுத்து கொண்டு , பஞ்சபூத தொந்தரவுகளை எல்லாம் தாங்கிக்கொண்டு உங்களை, இந்த கனியை புசிக்க வைத்து விட்டான். அதை நீங்கள் பறவைகளை போன்று கனிகளை எடுத்துச்சென்று, கடல் கடந்து, வனம் கடந்து, எல்லைக்கோடு கடந்து, வர்த்தமானம் கடந்து, துருவங்களை கடந்து, அந்த கனிகளை புசிக்கிறீர்கள்.

நீங்கள் உருப்பட வேண்டியவர்கள்

 • அந்த கனியை புசித்து நீங்கள் ஒரு விருக்ஷமாக வளர வேண்டுமே தவிர, கனியின் தன்மையை வர்ணிப்பதோடு மட்டும் நின்று விட கூடாது. நீங்களும் அன்பெனும் கனியாக மாறி, உங்களுக்குள் இருக்கின்ற அந்த விருக்ஷத்தின் தன்மையை வெளிக்கொணர்வதே, முக்கண்ணன் இயற்றுகின்ற மாபெரும் யக்ஞத்தின் சிறப்பாகும், சாரமாகும்.
இந்த பிறவியில் இந்த யக்ஞத்திலே உருப்பட்டால் பிறவியில்லா நிலையடைதல் சாத்தியமாகும், இன்னொரு பிறவியில் சாத்தியங்கள் இல்லை

சித்தர் பாஷையில் மெய்யுணர்வை “முக்கண்ணனால் முச்சந்தியிலே பதிக்கப்பட்டிருக்கின்ற பிரதமை” என்று அழைப்பார்கள்

 • நீங்கள் உங்களுக்குள்ளே இருக்கின்ற கனி என்கின்ற முக்கண்ணனால் முச்சந்தியிலே பதிக்கப்பட்டிருக்கின்ற பிரதமையை நன்றாக பற்றி, அந்த பிரதமையில் இருந்து , அதவாது மெய்யுணர்வில் நின்று, எப்படி விருக்ஷத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனைகளும் சித்தாந்தங்களும் ஏற்பட வேண்டுமே தவிர, ஏதோ வருவதும் நிகழ்வுகளிலே கலந்து கொண்டு, கேளிக்கைகள் செய்வதும், அருந்துவதும், செல்வதும் என்ற நிலைகள் எல்லாம் இந்த யக்ஞத்திலே தவிர்த்து, தவநாட்டத்தோடு வேண்டும் என்பதே சித்தலோக மகாஜமிக்கைகளின் நல்லாசிகளாகும்.
 • நீங்கள் உருப்பட வேண்டியவர்கள் !
 • உருப்பட்டே தீர வேண்டியவர்கள் !
 • அனைவருடைய உருப்படுதலுக்கு ஏற்படுத்தபட்ட யக்ஞமே இந்த மகாயக்ஞமாகும்.

கடிவாளம் கட்டாத குதிரையை போல பிறவி வேண்டுமா ?

 • இந்த யக்ஞத்தை சரியாக பற்றி முக்கண்ணன் நினைக்கின்ற, கனவு காணுகின்ற , ஒரு ரிஷியின் தீர்க்க எண்ணத்திற்கு, ஒரு மகாபுருஷனுடைய எண்ணத்திற்கு, ஒரு ஞானியின் எண்ணத்திற்கு, நீங்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.
 • முக்கண்ணனுடைய எண்ணத்திற்கு நீங்கள் கட்டுப்படவில்லை என்றால், கடிவாளம் கட்டாத குதிரையை போல், உங்களை சுற்றி உள்ள மாயையிலே சிக்குண்டு, சிக்குண்டு, களைத்து, முதிர்வு வந்தவுடன், எருவாசல் கருவாசல் அடைவது என்பது, எதார்த்தமான உண்மையாகிவிடும். உமக்கு ஏற்கனவே சொன்னதை போல் இனி சனாதனதர்ம யோகி என்று எவரேனும் உரைத்தால், உங்களை சிறைசேதம் செய்து மகாபாதக சித்ரவதை செய்வார்கள். இந்த நிலைகளை கொள்ளாமல், கொள்ள வேண்டிய நிலையை கொண்டு, முக்கண்ணன் வகுத்த நெறிகளை பின்பற்றி, வாழ்வில் இனிமைகளை எடுத்து செல்ல, சித்த லோக மகா ஜமிக்கைகளின் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது

வேலவனின் கனல் – வேள்வியின் அறுசக்திகள்

 • இந்த வேள்வியில் வெளிப்படுகின்ற கனல், வேலவனின் அறுகோணத்தில் இருந்து வெளிப்படுகின்ற கனலுக்கும், சக்திகளுக்கும் ஒப்பாகும்.
 • இதுவரை முக்கண்ணன் தன்னுடைய மகாபராக்கிரமங்களை காண்பிக்காது இருந்த நிலைகள் மாறி, இந்த வேள்வி முதல் முக்கண்ணனுடைய பூரண பராக்கிரமம் வெளிப்படுத்துகின்ற உன்னதமான வேள்வியாக, மகாயக்ஞமாக இது அமையும்.
 • இந்த ஆறு நிலைகளில் இருந்து வெளிப்படுகின்ற மகாசக்தியை, மகாவாக்கியதை, மகாபிரபஞ்சத்தை, மகாபுண்ணியத்தை , உங்களினுடைய அஷ்டத்திலும், நவத்திலும் (நெற்றி உச்சி மையம்), அனைத்து துவாரங்களிலும் அந்த மகாசக்தியை நிரப்பி நீங்கள் உருப்பெற வேண்டும் என்பதே சித்த லோக மகாஜமிக்கைகளினுடைய நல்வாழ்த்துக்களாகும்.

அஸ்வத்தாமன், சித்தர் தேரையர், சிவகணம் பிருங்குகு

 • முன்மொழியில் : அஸ்வத்தாமன் திருமூர்த்திமலையில் சில காலம் வாழ முடிவெடுத்த காரணத்தால் பரஞ்ஜோதி வம்சத்தினர் சற்று கவனமாக இருக்க கூறப்பட்டது , ஏனெனில் சாபத்தின் காரணமாக சித்தம் புத்தி தடுமாறி சில அசௌகரியங்கள் ஏற்படலாம். மாய தாந்த்ரீக பராக்கிரமங்கள் நிறைந்தவன் அஸ்வத்தாமன் .
 • உமக்கு ஏற்கனவே சொன்னதைப்போல, அஸ்வத்தாமனால் சில இடர்பாடுகள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கின்ற காரணத்தால், பிரிங்குகு என்ற சிவகணங்களிலே தலையாய கணங்குளுள் ஒன்றான இந்த பூதசக்தி, இந்த வேள்வியை காக்கும் பொருட்டு, தானே விண்ணில் இருந்து மண்ணில் இறங்கி, எப்பேர்ப்பட்ட மாயையை விழுங்க வல்ல ஒரு எலி வடிவம் தாங்கி, குருவாரத்தன்று ஏற்கனவே நிலையாகி விட்டது. இந்த வேள்வியில் முக்கண்ணனின் அறுசக்திகளோடு, இந்த சிவகணத்தின் அதிர்வலைகள் வெளிப்படும். இதை விட வேறென்ன சிறப்பு வேண்டும்.
 • தேரையர் என்ற மிகப்பெரிய சித்தரானவர், யந்திர சாஸ்திரத்திலே புலியாக விளங்குகின்ற அவர், முக்கண்ணனுக்கு காவலாகவும், முக்கண்ணனின் அறுசக்திகள் இந்த பூவுலகிற்கு வெளிப்பட சாட்சியாக விளங்குவார்.

முடிவெடுங்கள் என்நிலை வேண்டுமென்று

 • ஆகவே இந்த நிமித்தங்கள் எல்லாம் உங்கள் மனதிலே நன்றாக பதித்து வாழ்வில் உருப்பட வேண்டுமா அல்லது நிர்கதி அடைய வேண்டுமா என்று நீங்கள் முடிவெடுங்கள்
 • ஆனால் காலம் ஒருபோதும் உங்களுக்கு காத்திருக்காது, முக்கண்ணனும் உங்களுடைய மாற்றத்திற்காக காத்ததிருக்கின்ற நிலைகள் எல்லாம் முடிந்தாகி விட்டது
 • காலத்தின் வசம் முக்கண்ணனின் வசமாக மாறுகின்ற நிலைகள் நெருங்கி விட்டது
 • நீங்கள் ஒரு மிகப்பெரும் வனத்தை உருவாக்கும் விருக்ஷமாக இருக்க போகிறீர்களா அல்லது கனிகளை புசித்து உங்களுடைய நிலைகளை கொய்து கொள்ள போகிறீர்களா ?

வேள்வியின் ஒழுக்க நிலைகள்

 • முக்கண்ணனும் ஒவ்வொரு முறையும் ஒழுக்கங்களெல்லாம் உரைத்து விட்டு சென்றாலும், சிலர் தனி மனித ஒழுக்கத்தையும், சிலர் குடும்ப ஒழுக்கத்தையும் கடைபிடித்தாலும் , எண்ணி சில குடும்பங்களே தனி மனித மற்றும் குடும்ப ஒழுக்க நெறியை காக்கிறார்கள்
 • குரு எந்த நெறியை தன் திருநாவால் உரைத்தாலும், சீடர்கள் அந்த நெறியை ஆராய்வதோ, விமர்சிப்பதோ அல்லது ஏளனம் செய்வதோ சீடனுடைய தர்மமாகாது, அதை கடைபிடிப்பதே சீடனின் தர்மமாகும்
 • தனிமனித ஒழுக்க சீலர்களுக்கு குடும்பஒழுக்கம் பாழாக்குகின்ற நிலை பெரும்பாலும் உள்ளதால் அதை நிவர்த்தி செய்ய சிறு உபாயம்
  • ஒரு கோபுர கலசத்திற்கு நிகரான கலசத்தை இல்லத்தில் வடிவமைத்து விடுங்கள். ஒரு கலசம் மேல மாவிலை கொத்துகள்,அதற்கு மேலே மஞ்சள் பூசிய தேங்காய் வைத்து, திவ்ய பரிமணங்களையெல்லாம் சேகரித்து , ஒரு அணையா ஜோதியை எரியச்செய்தால் அந்த இல்லம் ஆலயமாகும்
  • அந்த ஆலயம் என்ற நினைப்பு இல்லத்தில் ஏற்பட்டு, தர்மநெறி கடைபிடிப்பார்கள்

ஒரு மாதம் தர்மசீலர்களாய் வாழ்ந்து பாருங்கள்

 • இந்த மார்கழி திங்கள் என்ற ஒரு மாதம் தர்மசீலர்களாய் வாழ்ந்து பாருங்கள், உங்கள் வாழ்வில் எத்தனை எத்தனை ஏற்றங்களை முக்கண்ணன் , சித்த லோக ஜமிக்கைகள் வாரி வாரி வழங்குவார்கள் என்பதை அனுபவ ரீதியாக உணரலாம்
 • இந்த யக்ஞ காலத்திலே குருவின் எண்ணத்திற்கு இணங்க குருவாரநாளில் உபவாசம் இருந்து, ஏகாந்த நிலைகளை ஏற்படுத்தி, அந்த அறுசக்தியாகிய உன்னதத்தை அனுபவித்து, நீங்களும் விருக்ஷமாக வேண்டுமென்பதே சித்த லோக மகாஜமிக்கைகளின் நல்லெண்ணங்களாகும்.

முக்கண்ணனின் அமைதி திட்டம்

 • இந்த நிகுல வம்சமானது மௌன மோனத்தை உறைக்கின்ற, மகா சுருதி வாக்கியத்தை உறைக்கின்ற, சத்தியத்தை தர்மத்தை உறைக்கின்ற, உத்தம வம்சமாக, எத்தனை எத்தனை வம்சங்கள் மறைந்தாலும், தர்மத்திற்காக ஒரு வம்சம் உண்டென்றால் அதுவே இந்த நிகுல வம்சமாகும்
 • இந்த நிகுல வம்சத்தை வாழ வைக்க உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் கடமைகள் உள்ளது, நாங்கள் எங்கள் கடமைகளை சிறப்பாக ஆற்றிட , நீங்களும் உங்கள் கடமையை சிறப்புடன் செய்ய, இருவரும் சேர்ந்து முக்கண்ணனின் பிறப்பின் நோக்கமாகிய அமைதியை
  • மண்ணிலிருந்து மண் அமைதி பெற வேண்டும்
  • மண்ணிலிருந்தே விண் அமைதி பெற வேண்டும்
  • மண்ணிலிருந்தே பாதாள உலகம் அமைதி பெற வேண்டும்
  • மண்ணிலிருந்தே பூத கணங்கள் அமைதி பெற வேண்டும்
  • மண்ணிலிருந்தே ஆழ் உலகங்கள் அமைதி பெற வேண்டும்
   என்ற நிலைகளை நிலைப்படுத்துவோம்
 • இந்த மண்ணுலகம் அமைதி பெற
  • முக்கண்ணன் என்கின்ற சாம்ராஜ்யம்,
  • முக்கண்ணன் என்கின்ற மகாசக்தி, மகாசித்தி, மகாபிரதமை , மகாஜோதி, அறுசக்தி, இந்த மண்ணுலகிலே வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்
 • இந்த யக்ஞத்திலே நீங்கள் உங்களை அமைதி என்கின்ற வனத்தின் தோற்றர்களாக இருக்க வேண்டும் என்பதே சித்த லோக மகாஜமிக்கைகளின் நல்லெண்ணங்களாகும்.

குரு சூரியன்

குரு என்றால் பவிஷ்யம் , மங்களம், ஸ்வர்ணம், சகலமும் நன்மை. எங்கெல்லாம் மங்களம் உண்டாக வேண்டுமோ அங்கெல்லாம் குரு இடம் பெற வேண்டும். கல்வி கற்க , சாஸ்திரம் தேர்ச்சி பெற, திருமணம், குழந்தைபேறு பெறுவதற்கு அனைத்திற்கும் குரு தேவைப்படுகிறது. இது மண்ணுலக நிலை.

விண்ணுலகத்தில் ஆதவனாவான் தன்னுடைய கடமைகளை ஆற்ற குருவின் மங்கள ஒளியை பெற்று , குருவின் கொடையை பெற்றே, எல்லா உலக உயிர்களுக்கும் தன் கொடை விரிய செய்து, கடமை ஆற்றுகிறான். இதுவே மகாயக்ஞதிற்கும்-சூரியனுக்கும், நிகுலவம்சத்திற்கும்-சூரியனுக்கும் ஆன தொடர்பு.

பூமியில் ஏற்படுகின்ற அரசியில் சூழ்நிலைகள்

ஒரு மகாஅரசனாவான் தன் அதிகாரத்தை நிலை நாட்ட, கண்ணுக்கு புலனாகாத ஒரு கிருமியை உலகம் முழுதும் ஏவினான். உலகம் மாண்டது என்று எண்ணினான். உலகம் முழுவதும் சற்று தொந்தரவுகள் ஏற்பட்டாலும், விட்ட பாணம் அவன் கைக்கே சென்றுவிட்டது. அதை கொண்டு என்ன செய்வதென்றறியாது நிலைகுலைந்து நின்று கொண்டிருக்கிறான். முந்தைய இருபெரும் மகாயக்ஞயமானது அந்த பாணத்தை திருப்பி தரவே ஏற்படுத்தப்பட்டது.

நாடுகளின் நிலை

பாணம் திரும்பி சென்றாகிவிட்டது, அவன் இனத்தை துன்புறுத்துகிறது, எப்படி இரண்டு யக்ஞங்கள் திருப்பி தர இயற்றப்பட்டதோ , அதேபோல் இனி வரும் யக்ஞம் பாரத்தை நசுக்க முனையும் அந்நிய சக்திகளின் சூழ்ச்சிகளை அவர்களுக்கு திரும்ப கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும். முக்கண்ணனின் பிறப்பின் வைராக்கியமாக பாரதம் தலைதூக்கி வல்லவம் மிக்க நாடக நிலைப்பட அந்த உத்தமங்கள் எல்லாம் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. நீங்கள் இந்த பயணங்களில் முக்கண்ணனோடு பயணித்தால் உங்கள் திருநாமங்களை வரலாறுகள் எடுத்து உரைக்கும்.

இந்த அறுகோணத்தில், யக்ஞத்தில் இருந்து வெளிப்படுகின்ற சக்திகள் இந்த பூமி உள்ளவரை, சத்திய யுகம் உள்ளவரை நின்று காக்கும் என்பதில் ஐயமில்லை, ஐயமில்லை.

சத்குருவே சரணம் ! சந்தோஷம்