குரு மகாத்மியம் உலக காரணி

குரு மகாத்மியம் உலக காரணி

தன்னை தான் அகத்தியரின் அலைவரிசை என்று பாவம் தெரியாது ஒருவர்,  பரஞ்சோதியின் நிலையை மாற்றி கூறிய காரணத்தினால் , பரஞ்சோதியின் நிஜ சொரூபத்தை, அமிர்த ஜோதி வடிவத்தை, தோற்றத்தை, சத்தியத்தை என்றென்றும் நிலை பெற செய்ய உலக காரணியாக அமைந்ததே 2017 குருபௌர்ணமியன்று நடந்து ஒரு நிகழ்வு.

ஆனால் அதற்கு 11 ஆண்டு காலம் முன்பிருந்தே, இந்த சித்த லோக ஜமிக்கைகள் தங்களின் நல்வாக்குகளை அருள வேண்டி பரஞ்சோதியிடம் பணிந்தார்கள். அதெற்கெனவே ஒரு ஆத்ம தேகத்தை தேர்ந்து எடுத்து , அதனுள்ளே பக்குவம் ஏற்பட கும்முட்டி தீட்சையை தனது கால் பெருவிரலால் குருமகான் அருளினார்கள்

அது போதாதென்று பற்பல வாழ்க்கை அனுபவங்களை கொண்டு அந்த ஆத்ம தேகத்தை பக்குவப்படுத்தி ,இந்த சித்த லோக ஜமிக்கைகளின் ஒரு வெற்றிடத்தை கொடுத்து அதன் மூலம் இந்த குருமகாத்மீயம் வெளிப்படுகிறது

இந்த குருமகாத்மீயம் இந்த யுகத்திற்கு வெளிப்பட வேண்டும் என்பது காலத்தின் நிர்ணயம் ஆகும், அந்தஅந்த உயிர்கள் இக்கடமைகளை செய்ய பிறவிக்கு முன்பே நிச்சியக்கப்பட்டு வந்தாலும் அதை செயல்படுத்தும் உலக நிகழ்வுகளும் தேவை படுகிறது. அதே போல இந்த பரஞ்ஜோதியும் தானாக எதையும் வெளிபதுத்தாது , ஒன்றும் அறியாததை போல் இப்பொழுது மட்டும் அல்ல , எல்லா அவதார நிலைகளிலும் இப்படி இருக்கின்ற காரணத்தினால் இந்த குருவும்  சரி, அந்த குருவின் அம்சத்தை பெற்ற இந்த சத்திய நிலைகளை பூமியின் நன்மை பொருட்டு  வெளிப்படுத்தும் கடமை சித்த லோக ஜமிக்கைகளுக்கு பிரம்மம் கொடுத்ததாகும்.